13 Jan 2017

நன்றி Tnps  portal

தினமணி

1. தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா எழுதிய 'ஒருத்திக்கே சொந்தம்' என்கிற முதல் நாவலை ஜனவரி மாதத்தின் 'குடும்ப நாவல்' இதழில் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.
 ஜெயலலிதாவின் முதல் நாவல் 'ஒருத்திக்கே சொந்தம்' 1980ம் ஆண்டு வெளியானது. இந்த நாவலை மாலைமதி பதிப்பகம் வெளியிட்டது. நாவல் எழுத வேண்டும் என்ற கனவை நனவாக்கியவர், ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், மறைந்த துக்ளக் ஆசிரியருமான சோ.
 ஒரு நாயகனுக்கும், 2 நாயகிகளுக்கும் இடையிலான பாசக் கதைதான் 95 பக்கம் கொண்ட 'ஒருத்திக்கே சொந்தம்' நாவலின் கரு. இந்த நாவலை படிக்க வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குடும்ப நாவல் இதழில் இது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே சோழர்கள் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் மூலம் தென்கரும்பலூர், தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளில் 13-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் வாழ்ந்தது தெரியவந்தது. மேலும், கல்வெட்டில் இருந்த ஓவியங்கள், எழுத்துகளை ஆய்வு செய்தபோது, கோயில் அர்ச்சகர்களுக்குத் தேவையான நிலத்தை சோழர்கள் நன்கொடையாக வழங்கியதும் தெரியவந்துள்ளது.

3. பிரபல நாடகக் கலைஞர், நாடக நடிகர், தயாரிப்பாளர் விழா வேந்தர் என்.கே.டி.முத்து (82)  காலமானார். ஏராளமான பாராட்டு விழாக்களை வெற்றிகரமாக நடத்தியதால் எம்.ஜி.ஆரால் விழா வேந்தர் எனப் பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டவர்.

4. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் வி. ஆச்சார்யா  நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6. சர்வதேச சூரியசக்தி கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது :
 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கி வைத்தார்.
 சூரியசக்தியில் சிறந்து விளங்கும் 121 நாடுகளை ஓர் அமைப்புக்குள் கொண்டு வந்து, அதுதொடர்பான ஆய்வு உள்ளிட்டவைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
 இதுவரை இந்தக் கூட்டணியில், 25 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இணைந்து செயல்படுவதற்குத் தயாராக இருப்பதாக ஐ.நா. மற்றும் உலக வங்கி ஆகியனவும் அறிவித்துள்ளன.

7. உடல்நலக் குறைவு காரணமாக தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நடிகரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி ராஜிநாமா செய்துள்ளார்.

8. சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 3-1-2017 அன்று தொடங்கி வைத்தார்.

Others

10. பாரதீய ஜனபீட அமைப்பின் “நவ்லேகான் விருது 2016” ( Navlekhan Award ) சாராதா மற்றும் கியான்ஷாம் குமார் தேவன்ஷ் (Shraddha and Ghyansham Kumar Devansh) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

11. சங்கர் பால சுப்ரமணியன் எனப்படும்   இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய பேராசியருக்கு அந்நாட்டின் உயரிய விருதான Queen Elizabeth II Knighthood வழங்கப்பட்டுள்ளது.

12. மத்திய குடிமைப்பணி தேர்வு ஆணையத்தின் (Union Public Service Commission ) தலைவராக டேவிட் R சைம்லீ (David R Syiemlieh) நியமிக்கப்பட்டுள்ளார்.
13. கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் இராணுவ தளபதியாக ( Major General ) இந்தியாவில் பிறந்த தொழிலதிபரான சேக் ராஃபிக் மொகமது (Shaikh  Rafik  Mohammed) நியமிக்கப்பட்டுள்ளார்.

14. ”பர்கார்க் தனுவா ஜாத்ரா” ( Bargarh Dhanua Jatra) எனப்படும் உலகப்புகழ்பெற்ற 11 நாள் திருவிழா ஒடிசா மாநிலம் பர்கார்க் நகரில் 3-1-2017 அன்று துவங்கியது.


No comments:

Post a Comment