11 Jan 2017

செல்லின் ஒரு பகுதியின் புரோட்டோ பிளாசம் பற்றிய சில தகவல்கள்:-

💢 செல்லில் உள்ள உயிர்பொருள் - புரோட்டோபிளாசம்
💢 புரோட்டோபிளாசம் பொதுவாக "உயிரின் இயற்பியல் தளம்" என்று அழைக்கப்படுகிறது.
💢 ஒரு செல், செல்சுவரையும், புரோட்டோபிளாஸ்ட்டையும். புரோட்டோபிளாஸ்ட் என்பது செல்லில் உள்ள மொத்த புரோட்டோபிளாசத்தை குறிக்கிறது.
1. பிளாஸ்மா (செல்சவ்வு):
💢 செல்லின் உள்ள அனைத்து பொருட்களையும் சூழ்ந்து காணப்படுகின்ற மெல்லிய நுண்ணிய உயிருள்ள சவ்வு - செல் சவ்வு
💢 செல் சவ்வு செல்லுக்கு ஒரு எல்லையாக உள்ளது.
💢 செல்சவ்வு மீள் தன்மை கொண்டது
💢 தொடர்ச்சியான இரட்டை அடுக்கு கொழுப்பு மூலக்கூறுகள் & புரத மூலக்கூறுகள் செல்சவ்வின் இரு புறங்களிலும் காணப்படுகிறது.
❤பணிகள்:
💢 பிளாஸ்மா சவ்வு குறிப்பிட்டசில பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செல்லுக்கு உள்ளேயோ (அ) செல்லுக்கு வெளியேவோ நுழைவதை (அ) வெளியேறுவதை முறைப்படுத்துகின்றன.
💢 இதையே தேர்வு கடத்து சவ்வு (அ) அரை கடத்து சவ்வு என்று அழைக்கப்படும்
💢 காயங்களிலிருந்து செல்லை பாதுகாக்கிறது.
💢 ஒரே செல்லின் பல நுண்ணுறுப்புகளுக்கும் இடையேயும், அருகாமையில் உள்ள செல்களுக்கு இடையேயும் பொருட்கள் (ம) செய்திகள் கடத்தப்படுவதை அனுமதிக்கிறது
💢 அருகமைந்த செல்களுக்கு இடையேயான சில கரிய இணைப்புகளை அளிக்கிறது.

No comments:

Post a Comment