9 Jan 2017

KAVIKKO ABDUL RAHAMAN

Igball of Tamilnadu
🌟 கவிக்கோ அப்துல் ரகுமான் 🌟

ஆசிரியர் குறிப்பு :

🌹 பிறப்பு : 1937 நவம்பர் 9

🌹 பெற்றோர் : மஹி என்னும் சையத் அஹமத் - ஜைனத் பேகம்

🌹 ஊர் : மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை

கல்வி :

🏫 அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார்.

🏫 மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை கல்வியைக் கற்றார். தொடர்ந்து இளங்கலை, முதுகலை பட்டங்களையும் பெற்றார்.

🏫 முனைவர் மா. இராசமாணிக்கனார், ஒளவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.

🏫 சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி :

🔆 தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார்.

🔆 வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் 1961 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றினார்.

🔆 அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் எனப் பணியாற்றினார்.

🔆 பின்பு 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.

🔆 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

🔆 தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 முதல் 2011 வரை பணியாற்றினார்.

சிறப்பு :

🔯 தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.

சிறப்பு பெயர்கள்

🌠 கவிக்கோ

🌠 வானத்தை வென்ற கவிஞர்

🌠 மரபு கவிதையில் வேர் பார்த்தவர், புது கவிதையில் மலர் பார்த்தவர்

🌠 விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி

🌠 சூரியக் கவிஞன்

🌠 தமிழ்நாட்டு இக்பால்

நூல்கள் :

📖 ஆலாபனை (சாகித்திய அகாடெமி விருது பெற்றது)

📖 நேயர் விருப்பம்

📖 சொந்த சிறைகள்

📖 விதைபோல் விழுந்தவன்

📖 கரைகளே நதியாவதில்லை

📖 சுட்டு விரல்

📖 பால் வீதி

📖 பித்தன்

📖 முட்டைவாசிகள்

📖 அவளுக்கு நிலா என்று பெயர்

📖 விலங்குகள் இல்லாத கவிதை

📖 தீபங்கள் எரியட்டும்

📖 உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்

📖 மரணம் முற்றுப் புள்ளி அல்ல

📖 காலவழு

இதழ் :

📕 கவிக்கோ

விருதுகள் :

🎯 சாகித்ய அகாடமி விருது.

🎯 தமிழக அரசின் பாரதிதாசன் விருது.

🎯 தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் அன்னை விருது.

No comments:

Post a Comment