10 Jan 2017

ஆஸ்கார் விருது வென்ற கோவை இளைஞர் கிரண் பாத் 10.01.2017

கோவையை சேர்ந்த கிரண் பாத் என்ற இளைஞர், தொழில்நுட்ப சாதனைகளுக்கான பிரிவில் ஆஸ்கார் விருது வென்று சாதனை படைத்துள்ளார்.

கிரண் பாத் உள்ளிட்ட 4 பேர், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐஎல்எம் எனப்படும் முக பாவனைகளை துல்லியமாகப் படம்பிடித்து, அதனை சினிமா காட்சிகளுக்கு, மெருகேற்ற உதவும் தொழில்நுட்பத்தை, கிரண் பாத் தலைமையிலான 4 பேர் அடங்கிய குழு வடிவமைத்துள்ளது. இதனை பாராட்டியே, ஆஸ்கார் விருதுவுக்கு, அவர்களின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில், கிரண் பாத் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

கிரண் பாத் குழுவினர் கண்டுபிடித்த தொழில்நுட்ப வசதி, பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், வார்கிராஃப்ட், ஸ்டார் வார்ஸ் 7 உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படங்களின் வெற்றிக்கு, இந்த ஐஎல்எம் முகபாவனைகள் படம்பிடிக்கும் தொழில்நுட்மும் முக்கிய காரணமாகும்.

41 வயதாகும் கிரண் பாத், கோவையில் உள்ள ஸ்டான்ஸ் ஸ்டான்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தவர் ஆவார். இதன்பின், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி மையத்தில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக, கிரண் தனது நண்பர்கள், மைக்கேல் கோபர்வாஸ், பிரையன் கான்ட்வெல், பெய்ஜ் வார்னர் ஆகியோருடன் சேர்ந்து, பிஎல்எம் தொழில்நுட்பத்தை வடிவமைத்தார். பின்னர், இந்த தொழில்நுட்பம், அவன்சர்ஸ், ஹல்க் போன்ற படங்களில் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தி பார்க்கப்பட்டது.

அதன்பிறகே, மற்ற ஹாலிவுட் படங்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment