4 Jan 2017

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கெகர் -04.01.2017

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெகர் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

டெல்லி : உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெகர் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து டிஎஸ்.தாக்கூர் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக பஞ்சாப்பை சேர்ந்த ஜெ.எஸ்.கெகர் அறிவிக்கப்பட்டார். அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

சீக்கியர்கள்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமை நீதிபதியான கெகர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment