9 Jan 2017

உலகின் மிக உயர்ந்த டெலெஸ்கோப் – திபெத்தில் சீனா நிறுவுகிறது. January 8, 2017

சீனா, இந்திய எல்லைக்கோட்டை ஒட்டிய திபெத் பகுதியில், உலகின் மிக உயர்ந்த இட, புவி ஈர்ப்பு அலை டெலெஸ்கோப் ஒன்றை நிறுவி வருகிறது. நகரி 1 என்ற பெயரிடப்பட்ட முதல் டெலெஸ்கோப் நிறுவும் பணிகள் துவங்கி விட்டன என்று தலைமை விஞ்ஞானி, யோ யாங்கியாங் தெரிவித்தார். இதன் மூலம், அண்டவெளியிலிருந்து வரும் மிக மெல்லிய எதிரொலி உணரப்பட்டு, அண்டவெளி உருவான போது எழுந்ததாகக் கருதப்படும் வெடிப்பு பற்றிய அரிய தகவல்கள் திரட்டப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. தவிர, கடல் மட்டத்திலிருந்து 5,250 மீ. உயரத்தில் நிறுவப்படும் இந்த டெலெஸ்கோப் வாயிலாக, வடதுருவத்தில் ஆரம்ப கால புவி ஈர்ப்பு அலைகள் துல்லியமாகப் பெறப்படும். 2021ஆம் ஆண்டு, இது செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment