6 Jan 2017

January Current Affairs 2017

நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் யார்? - சைரஸ் மிஸ்திரி

2. டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - ரத்தன் டாடா

3. அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டவர் யார்? - ரெக்ஸ் டில்லர்சன்

4. மலேசியாவின் புதிய அரசராக அரியணையேறியவர் யார்? - சுல்தான் முகமது

5. சர்வதேச அளவில் குரங்குகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 14

6. 2016-ம் ஆண்டிற்கான உலக சிந்தனையாளர் பட்டியலில், இடம்பெற்ற இந்தியர் யார்? - சுஷ்மா சுவராஜ்

7. 2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில், முதலிடம் வகிப்பவர் யார்? - பிரியங்கா சோப்ரா

8. உலக பில்லியர்ட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்? - பங்கஜ் அத்வானி

9. உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் டாப் - 10 நகரங்களில், தேர்வு செய்யப்பட்ட இந்திய நகரம் எது? - ஜோத்பூர் (இராஜஸ்தான் மாநிலம்)

10. பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராணுவத் தளபதி யார்? - ஆசிஃப் கபூர்

11. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மதுரை மாணவர் யார்? - செல்வபிரசன்னா

12. உலகம் முழுவதுமிருந்து பிற நாடுகளுக்கு குடியேறியவர்கள் பட்டியலில், முதலிடம் வகிக்கும் நாடு எது? - இந்தியா

13. ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற செஸ் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில், உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்? - ஹர்ஷினி

No comments:

Post a Comment