ஐக்கிய நாடுகள் கழக சாசனம் (UNO Charter)
United Nations Association of the Charter
ஐக்கிய நாடுகள் கழக சாசனம் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடைய உரிமைகள் அவை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அக்கழகத்தின் உறுப்புகள் அதைப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.
நோக்கங்கள்
ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தில் உலக அமைதி மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கங் களாக சொல்லப்பட்டிருக்கிறது.
உலகநாடுகளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துதல்.
பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல்.
சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதித்து அவைகளுக்கு ஆதரவுத் தருதல்.
மேற்கூறியவற்றை அடைவதற்கு வழிவகைகள் கண்டு அவை நிறைவேற கருவியாக இருத்தல்.
அமைப்பு
ஐக்கிய நாடுகள் கழகத்தின் ஆறு முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை:
பொதுப்பேரவை
பாதுகாப்பு மன்றம்
பொருளாதார மற்றும் சமுதாய மன்றம்
தர்மகர்த்தா கழகம்
உலக நீதிமன்றம்
செயலகம்
இவைத் தவிர ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதி மன்றங்களும், இவை எல்லாவற்றிற்கும் பொதுவான பல்வேறு இதர அமைப்புகளும் உலகெங்கும் இருக்கின்றன. இவைகளுடைய நோக்கங்களும் திட்டங்களும் உலகளாவியவை.
ஐக்கிய நாடுகள் கழக குடும்பம்
மேற்கூறப்பட்ட அமைப்புகளோடு குழந்தைகள் நல நிதிக் கழகம், முன்னேற்ற திட்ட குழு இன்னும் சிறப்புமிக்க இதர பிரதிநிதி மன்றங்கள் பல உள்ளன. இவையெல்லாம் உலக நாடுகளில் சமுதாய முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேவைப்படும் உதவிகள் சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதோடு அவற்றிற்கு பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவை
இப்பேரவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே ஒரு வாக்கு மட்டும் தரப்படுகிறது. அமைதி, பாதுகாப்பு புது உறுப்பினர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய முடிவுகளை பேரவை எடுக்கிறது.
பொதுப் பேரவையின் குழுக்கள்
பேரவையில் குழுக்களின் எண்ணிக்கை ஆறு.
முதல் குழு, ஆயுத ஒழிப்பு மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்புப் பற்றியது.
இரண்டாவது குழு, பொருளாதார மற்றும் நிதி சம்பந்தப்பட்டது.
மூன்றாவது சமூக மனிதாபிமான மற்றும் பண்பாடுப் பற்றியக் குழு.
நான்காவது, காலனி ஒழிப்பு மற்றும் சிறப்பு அரசியல் நிலை.
ஐந்தாவது நிர்வாகம் மற்றும் வரவுச் செலவுத் திட்டம் பற்றிய குழு.
ஆறாவது, சட்டம், நீதி பற்றிய குழு.
குறிப்பிட்டச் சில பிரச்சினைகள் குழுக்களின் முழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு கூட்டம் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. குழுக் கூட்டங்களில் முடிவுகள் சாதாரன பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு குழுக்களால் எடுக்கப்படும் முடிவுகள் பொதுப்பேரவையின் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன. பொதுப்பேரவையில் கலந்துக் கொண்டுள்ள பல்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பொருள்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய கருத்துக்களையும் அவற்றின் நிறைவுகளையும், குறைகளையும் எடுத்துரைக்கின்றனர்.
பேரவையில் விவாதங்கள், எடுத்துக் கொள்ளப்பட்டப் பொருள்களின் தராதர அடிப்படையில் நடைப்பெறுகின்றன. விவாத முடிவில் வாக்கெடுக்கப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன.
இவ்வாறு பொதுப் பேரவையால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தின் பணிகளுக்கு ஆதாரமாகும்.
மேல்சொல்லப்பட்டவாறு எடுக்கப்பட்ட முடிவுகள் கீழே தரப்படும் முறைகளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
ஆயுத ஒழிப்பு, அமைதி காத்தல், வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி பொதுப் பேரவையால் நியமிக்கப்படும் குழுக்கள் மற்றிம் இதர அமைப்புக்கள் இவற்றைப் பற்றி விவாதித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
சில சமயங்களில் பொதுப் பேரவையால் அழைக்கப்படும் உலக மாநாடுகளிலும் இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் கழக பொதுச் செயலர் மற்றும் செயலகம் அந்த செயலகத்தில் பணிபுரியும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் போன்றவர்களாலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
ஐக்கிய நாடுகளின் பணிகளும் அதிகாரங்களும்
பொதுப் பேரவையின் பணிகளும் அதிகாரங்களும் வருமாறு,
உலக அமைதி காத்தல், உலக நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதங்கள், மற்றும் போர்க் கருவிகள் பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய கொள்கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல்.
ஐக்கிய நாடுகள் கழக நிறுவனங்களின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பாதிக்கப்படும்போது அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல்.
உலக அரசியல் நடப்புகள், வளர்ச்சி, பன்னாட்டு சட்டம், மனித உரிமைகள், மனித சுதந்திரம், மற்றும் பொருளாதாரம், சமூகம், கல்வி, சுகாதாரம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் பற்றி ஆய்வு செய்தல்.
நாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்து வைக்கக் கூடிய பரிந்துரைகள் பற்றி முடிவெடுத்தல்.
பாதுகாப்பு மன்றம் மற்றும் சமூக பொருளாதார மன்றம் ஆகியவற்றிற்கு தற்காலிலிகமாக நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது.
பன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுத்தல்.
ஐக்கிய நாடுகள் கழக பொதுச் செயலரை தேர்ந்தெடுத்து நியமித்தல்.
பொதுப்பேரவையின் வருடாந்திர கூட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற கூட்டத்திற்கானத் தலைவர் அப்போதே தேர்ந்தெடுக்கப்படுவார். இருபத்தொரு துணைத் தலைவர்கள், முக்கியக் குழுக்களின் தலைவர்கள் எல்லோரும் கூட்டத் தொடக்கத்திலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பூகோள ரீதியாக ஆப்ரிக்கா, ஆசியா, மேற்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆண்டுதோறும் நடைபெறுகின்ற முறைப்படியான கூட்டங்கள் தவிர தனிக் கூட்டங்களும் கூட்டப்படலாம். இக்கூட்டங்கள் பொதுப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அல்லது பாதுகாப்பு மன்ற உறுப்பினரில் யாராவது ஒருவர் கேட்டுக் கொள்ளும்பொழுது கூட்டப் படுகின்றன. வருடாந்திரக் கூட்டங்கள் கூடும் போது பொதுப் பேரவையில் பொதுவான விவாதங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய கூட்டங்களில் உறுப்பு நாடு களின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உலக நிலவரம், உலக அரசியல் இவை பற்றிய பிரச்சனைகளை அவர்களுடைய உரைகளில் குறிப்பிட்டு பேசுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

No comments:
Post a Comment