4 Dec 2016

TNPSC GK Questions with Answers
பொது அறிவு

1. உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை எழுதியவர் ------------? - சார்லஸ் டார்வின் (1859)

2. சார்லஸ் டார்வின் உலகின் முக்கிய தீவுகளைச் சுற்றிப் பார்க்க பயன்படுத்திய கப்பல் ------------? - HMS. பீகிள்

3. உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு ------------? - உயிரியல்

4. உயிரியலின் பிரிவுகள் ----------- ? - தாவரவியல் மற்றும் விலங்கியல்

5. உயிரினங்கள் தம்முடைய பண்புகள், வாழும் முறைகள், அளவு, அமைப்பு, உணவூட்டம், போன்றவற்றில் வேறுபடும் தன்மை ------------? - உயிரினங்களின் பல்வகைத் தன்மை

6. நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய உயிரினங்கள் ------------? - நுண்ணுயிரிகள்

7. நுண்ணுயிரிகளைப் பற்றிய படிப்பு ------------? - நுண்ணுயிரியல்

8. ஒருசெல் நுண்ணுயிரி --------? - பாக்டீரியா மற்றும் புராட்டோ சோவா

9. பலசெல் நுண்ணுயிரி ----------? - பூஞ்சைகள் மற்றும் பாசிகள்

10. வைரஸை மின்னணு(எலக்ட்ரான்) ----------------ஆல் மட்டுமே பார்க்க முடியும் - நுண்ணோக்கியால்

11. வேலை செய்யத் தேவையான திறமை ------------? - ஆற்றல்

12. ஆற்றலின் அலகு ------------? - ஜுல்

13. ஒரு பொருள் நிலையாக இருக்கும்போதோ அல்லது இயக்கத்தில் இருக்கும்போதோ பெற்றிருக்கும் ஆற்றல் ----------? - இயந்திர ஆற்றல்

14. இயந்திர ஆற்றல் எத்தனை வகைப்படும் --------- ? - 2 (நிலை ஆற்றல், இயக்க ஆற்றல்)

15. ஒரு பொருள் அதன் நிலையை பொருத்தோ அல்லது வடிவத்தைப் பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல் ------------? - நிலை ஆற்றல்

16. இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் ------------? - இயக்க ஆற்றல்

17. வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் --------- ? - வேதி ஆற்றல்

18. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் ------------? - ஜேம்ஸ் ஜுல்

19. மின் விளக்கில் மின்னாற்றல் ------------------- ஆற்றலாக மாற்றமடைகிறது - ஒளி

20. மின் விசிறியில் மின்னாற்றல் ------------------ ஆற்றலாக மாற்றமடைகிறது - இயக்க

No comments:

Post a Comment