ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை கவர்னராக நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் விரால் வி ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
துணை கவர்னராக இருந்த உர்ஜித் படேல் கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து துணை கவர்னர் பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
துணை கவர்னராக நியமனம் செய்யப்பட்டாலும் எந்த பிரிவினை கவனித்துக்கொள்வார் என்பது குறித்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் நிர்வாகவியல் கல்லூரியில் 2008-ம் ஆண்டு முதல் பேராசிரியராக இருக்கிறார். வங்கி விதிமுறைகள், கார்ப்பரேட் பைனான்ஸ், கடன் வழங்குவதில் உள்ள ரிஸ்க் உள்ளிட்ட பிரிவுகளில் ஆர்வம் உடையவர்.
மும்பை ஐஐடியில் கணிப்பொறி அறிவியல் படித்தவர். ஸ்டெர்ன் நிர்வாகவியல் கல்லூரியில் நிதித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். லண்டன் பிஸினஸ் ஸ்கூலில் 2008-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்.
தற்போது எஸ்.எஸ்.முந்திரா, என்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ஆர்.காந்தி ஆகியோர் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருக்கின்றனர்.
’ரகுராம் ராஜனை ரோல் மாடல்’
ஐஐடி பாம்பேயின் முன்னாள் மாணவரான ஆச்சார்யா முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுடன் இணைந்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஒருமுறை இவர் ரகுராம் ராஜன் பற்றி குறிப்பிடும்போது, “ரகுராம் ராஜனை எனது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டால், அவரது திறமையில் 5% அல்லது 10% என்னால் வெற்றிகரமாக வெளிப்படுத்த முடியுமென்றால் நான் ‘ஏழைகளின் ரகுராம் ராஜன்’ என்று தேர்வேன்” என்றார்.
இவரும் ரகுராம் ராஜன் போலவே மத்திய ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை ஆதரிப்பவர்.

No comments:
Post a Comment