29 Dec 2016

அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான தீனாநாத் காலமானார் 26/12/2016


தேசிய சின்னமான அசோகச் சக்கரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்த தீனாநாத் பார்கவா(89) காலமானார். சுதந்திரத்துக்கு பிறகு, கைகளால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அலங்கரிக்க ஓவியர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த தீனாநாத் பார்கவா, தேசிய சின்னத்தை வடிவமைத்த குழுவிலும் முக்கிய அங்கம் வகித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட பார்கவா, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

No comments:

Post a Comment