28 Dec 2016

செய்தி துளிகள்

01) டச்சஸ் வங்கி ( Deutsche Bank ) இந்தியாவில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு ஆறுமாதம் குழந்தை வளர்ப்பு விடுமுறை (childcare leave) வழங்கியுள்ளது.

02) புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க தலா ரூ.3.54 மற்றும் ரூ.3.09 செலவு ஆவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

03) Google Toilet Locator - டெல்லி மற்றும் ம.பி. மாநிலங்களில், அருகே  உள்ள பொது கழிப்பிடங்களை அறிந்து கொள்ள உதவும் அலைபேசி செயலி.

04) வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தின் Aizawl நகரில் இலவச WiFi வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

05) Cash@Home  ---  மின்னணு வணிக நிறுவனமான ஸ்னாப் டீல் தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கு சென்று ரூபாய்2000 வழங்கும் திட்டத்தை ( ரூ.1 கட்டணத்தில் ) அறிமுகம் செய்துள்ளது.

06) ITBP எனப்படும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை , முதன்முறையாக தங்கள் பதுகாப்பு பணியின் உதவிக்காக இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் வாழும் Yak எனப்படும் பனிமலை மாடுகளை பயன்படுத்த உள்ளது.

No comments:

Post a Comment