25 Dec 2016

மனித இதயம் பற்றிய தகவல்கள்

🌺(1)மனித இதயம் ஓர் உள்ளீடற்ற தசைநார் அமைப்புடைய உறுப்பு ஆகும்.

(2)இதயம் தலைகீழ் கூம்பு அல்லது பிரமிட் வடிவம் உடையது.

(3)இதயத்தைச் சுற்றிலும் இரண்டடுக்குப் படலமாகிய "பெரிகார்டிய" உறை உள்ளது.
 
(4)இதயம் நான்கு அறைகளைக் கொண்டது  🌺ஆரிக்கில்கள்(ஏட்ரியங்கள்;
(1)உடலில் சுத்திகரிக்கப்படாத
இரத்தம் முழுவதயும் வலது ஆரிக்கிள் பெறுகின்றது.

(2)நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜன் மிக்க இரத்தத்தை இடது ஆரிக்கிள் பெறுகின்றது

🌺வெண்ட்ரிக்கிள்கள்;
(1)வலது வெண்ட்ரிக்கிள் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தை நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்குள் செலுத்துகின்றது.

(2)இடது வெண்ட்ரிக்கிள் ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தத்தை பெருந்தமனிக்குள் செலுத்துகின்றது

🌺இதயம் செயல்படும் முறை;
(1)கார்டியாக் தசையினால் மனித இதயமானது சுருங்கி விரிவடைகிறது.

(2)இதயத்தின் அறை,சுருங்கும் நிலை "சிஸ்டோல்" என்றும் விரிவடையும் நிலை "டையஸ்டோல்"
 என்றும் பெயர்

🌺இதயத்துடிப்பு;
(1)ஆரிக்கிலோ வெண்ட்ரிக்கிள் வால்வகள் மூடுவதால் "லப்" என்ற ஒலி தோன்றும்.

(2)வெண்ட்ரிக்கிள்கள் விரிவின்போது "டப்" என்ற ஒலி தோன்றுகின்றது.

🌺இரத்தக்குழாய்கள்;
(1)தமனிகள்;
*தமனிகள் இதயத்திலிருந்து சுத்தகரிக்கப்பட்ட இரத்தத்தை  எடுத்துச் செல்பவை.

(2)தந்துதிகள்;
* திசுக்களுக்கு இரத்தத்தில் இருந்து பொருள்களை வழங்குகின்றன

(3)சிரைகள்
*சிரைகள் திசுக்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத இரத்தத்தை எடுத்து செல்கின்றன.

No comments:

Post a Comment