இன்றைய நடப்பு நிகழ்வுகள் 26/12/16
இந்தியா
1. வானொலியின் மூலமாக “மனதின் குரல்” நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி நேற்று இந்த ஆண்டுக்கான கடைசி மனதின் குரல் உரையை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றியுள்ளார். இது அவரின் 27-வது மனதின் குரல் உரையாகும். இந்த உரையின் மூலம் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக நுகர்வோருக்கான ‘லக்கி கிரஹக் யோஜனா’ என்ற திட்டமும் சிறுவணிகர்களுக்கான ‘டிகி தன் வியாபாரி யோஜனா’ என்ற 2 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளன.
2. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்கவிக்கும் விதமாக ‘ஆதார் பேமெண்ட் ஆப் ‘ எனும் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
3. நுகர்வோரின் குறைகளைத் தீர்ப்பதற்கு பிரத்யேக இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.”ஸ்மார்ட் கன்ஸ்யூமர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயலியை ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் செல்லிடப்பேசிகளில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4. ஒடிசா மாநிலம் சண்டிபுரில் இந்திய ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதம் கடந்த டிசம்பர் 24-ம் தேதி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த ஆயுதம் 120 கிலோ எடை கொண்டது.இந்த ஆயுதம் போர் விமானத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகத்துல்லியமாக ரேடார் மூலம் கணித்து வெடிகுண்டு மூலம் தாக்கும் வல்லமை கொண்டதாகும்.
5. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலையுடன் கூடிய நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
6. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஓடிசாவின், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஓடிசா கடற்கரையில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.தற்போது இந்த மணல் சிற்பம் லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
உலகம்
1. பிப்ரவரி 2017ல் முதன்முறையாக நேபாளம் சீனாவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதற்கு Pratikar – 1 Exercise என பெயரிடப்பட்டுள்ளது.
2. அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு 61,800 கோடி டாலர் (சுமார் ரூ. 42 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட்டுக்கு அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
3. பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள தகவலின்படி 2016-ம் ஆண்டு அதிகமாக தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து முதலிடம் பிடித்துள்ளார்.உலகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த தேடல் பட்டியலில் பிவி சிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு டிரம்ப் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இன்றைய தினம்
1. இன்று சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம் (Charles Babbage Birth Day).
சார்லஸ் பாபேஜ் என்பவர் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று லண்டனில் பிறந்தார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். இதனால் இவரை கணினியின் தந்தை என்றும் அழைக்கின்றனர். இவரால் உருவாக்கப்பட்ட கணினி மிகப்பெரிய அறைக்குள் ஏராளமான இயந்திரங்களைக் கொண்டது.
2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 1925.

No comments:
Post a Comment