29 Dec 2016

சீனாவில் உலகிலேயே நீளமான புல்லட் ரயில் வழித்தடம் (2,252 கி.மீ.) செயல்பாட்டுக்கு வந்தது.

சீனாவில் வளமிக்க கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள ஷாங்காய், வளர்ச்சி குறைந்த தென்மேற்குப் பகுதியிலுள்ள கன்மிங் ஆகிய நகரங்களை இணைக்கும் 2,252 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடம், ஷிஜியாங், ஜியாங்ஷி, ஹுனான், குவாங்ஷு, யுனான் ஆகிய 5 மாகாணங்கள் வழியாகச் செல்கிறது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 330 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

ஏற்கெனவே பெய்ஜிங்-குவாங்ஷு இடையே 2,298 கி.மீ. தொலைவு கொண்ட வழித்தடம், கடந்த 2012-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது.

No comments:

Post a Comment