29 Dec 2016

செவ்வாய்' கிரகத்திற்கு செல்லும் இந்திய ஆராய்ச்சி குழு! 29/12/2016

'மார்ஸ் ஆர்பிட்டர்' செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள், அடுத்த கட்டமாக அந்த கிரகத்தின் சுற்றுப்புற சூழலில் ஆராய்ச்சி செய்யவுள்ளனர். அமெரிக்காவின் யூடா மாகாணத்தில், செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்தின் மாதிரியில் முதல்முறையாக அனைத்திந்திய குழு ஒன்று ஆராய்ச்சி செய்ய செல்கின்றனர். ஜனவரி 28 முதல் பிப்ரவரி 12 வரை MDRS எனப்படும் அந்த செயற்கை சூழலில் பல ஆராய்ச்சிகளை செய்ய அனுமதி பெற்றுள்ளனர். 2001ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மார்ஸ் சொசைட்டி, இந்த ஆராய்ச்சி கூடத்தை நிர்வகித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இங்கு தங்கி செவ்வாய் கிரகத்தை பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அங்கு செல்லும் இந்திய குழு, மனித உடம்பில் உள்ள பேக்டீரியா செவ்வாயில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும், அங்கு வீசும் தூசு புயல்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றனர்.

No comments:

Post a Comment