26 Dec 2016

பொது அறிவு 26/12/16

1. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் மன்னர் யார்? - முகமது பின் காசிம்

2. குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்? - இல்டுமிஷ்

3. முகமது கோரி பிரிதிவிராஜனை தோற்கடித்து முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவிய ஆண்டு எது? - 1192

4. துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தான் யார்? - இல்டுமிஷ்

5. தம்மை கடவுளின் நிழல் என்று கூறிக் கொண்டவர் யார்? - பால்பன்

6. டெல்லி சுல்தானகத்தின் காலம் என்ன? - 1206 முதல் 1526 வரை

7. குப்தர் கால கலைச் சின்னங்களில் ஒன்றான துருப்பிடிக்காத இரும்புத்தூண் எங்கு அமைந்துள்ளது? - மெஹருலி

8. முகலாயப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்? - பாபர்

9. ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலம் எது? - 1658 முதல் 1707 வரை

10. தென்னிந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்பட்ட மராட்டியர் எழுச்சி எந்த நூற்றாண்டைச் சார்ந்தது? - 17ம் நூற்றாண்டு

11. மன்னன் சிவாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் எந்த அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையினை அடைந்தது? - மகாராஷ்டிரா

12. சிவாஜி முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் துறைமுகத்தை சுறையாடிய ஆண்டு எது? - 1664

13. கனிஷ்கரின் தலைநகர் எது? - பெஷாவர்

14. நாளந்தா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் யார்? - தர்மபாலர்

15. விஜயநகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? - கி.பி.1336

No comments:

Post a Comment