7 Dec 2016

TNPSC மாதிரி வினா விடைகள் 07/12/16


1. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்? - யூரோ

2. வன விலங்குகளுக்கு நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அமைப்பு? - நீர் பிரி முகடு

3. இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு? - 1990

4. செயற்கைக்கோள் மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம்? - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

5. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு எங்கிருந்து பெறப்பட்டது? - சோவியத் ரஷ்யாவிலிருந்து

6. இந்தியத் திட்டக்குழுவின் தலைவர்? - பிரதமர்

7. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர்? - ஆச்சார்ய வினோபாவே

8. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு? - 1950

9. திருவருட்பாவை மருட்பா எனக் கூறியவர் யார்? - ஆறுமுக நாவலர்

10. நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து, பால் கலந்து செங்கழுநீர் தீஞ்சுவை கலந்து எனப்பாடியவர் யார்? - வள்ளலார்

11. பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி எனப் பாடியவர் யார்? - வள்ளலார்

12. இராமலிங்க அடிகளாரின் காலம் - 19 ஆம் நூற்றாண்டு

13. 'குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" இவ்வரியில் கோடிட்ட சொல்லின் பொருள் - பெண்

14. எந்தக் கீரையின் இலையுடன் மஞ்சள், உப்பு சேர்த்து பயன்படுத்த சொரி, சிரங்கு நீங்கும்? - குப்பை மேனி

15. நாள் ஒன்றுக்கு எத்தனை லிட்டர் நீர் குடிக்க வேண்டும்? - 3 லிட்டர்

16. இந்தியாவில் 100 சதவீதம் பயோ டீசலால் இயங்கும் பேருந்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது? - கர்நாடகம்

17. ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது? - சீனா

18. முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது எது? - நல்லாசிரியர் விருது

19. சர்வதேச உலக நீதி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - ஜூலை 17

20. ஒரு பொருளை 50 ரூபாய்க்கு வாங்கி, 75 ரூபாய்க்கு விற்றால் லாப சதவீதம் எவ்வளவு?

விடை: 50

No comments:

Post a Comment