4 Dec 2016

New Delhi

இந்தியாவின் தலை நகரம் எது?

புது தில்லி

விளக்கம்:
புது தில்லி இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில்-NCT உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, 1911 திசம்பர் 15 இல் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுமானப்பணி நடந்தேறியது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புதுதில்லி என 1927 ல் பெயர் சூட்டப்பட்டு 1931 பிப்ரவரி 13 அன்று  பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 2011 திசம்பர் 12 இல் புதுதில்லியின் நூற்றாண்டு விழா நடந்தேறியது. புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது.

No comments:

Post a Comment