6 Dec 2016

பசு, பெற்றம், மான், எருமை ஆகிய இவற்றின் பெண்ணினம், வினா இடைச்சொல், முடித்தல், இணக்கமாதல், ஒப்பாதல், அமைத்தல், ஆன்மா, ஆச்சா மரம், எதிர்மறை இடைநிலை ஆகிய இவை அனைத்தையும் ஓர் எழுத்து கொண்டு குறிப்பிட முடியும் அது எது?



விளக்கம்::
'ஆ' என்ற ஒரே சொல்லில் மேற்கண்ட அனைத்தையும் நாம் குறிப்பிட முடியும். இதே போல 'ஈ' என்ற அந்த ஒரு சொல்லில் ஈதல், இரக்கம், படிப்பித்தல், படைத்தல், ஈணுதல், நேர்தல், அதிசயக் குறிப்பு, தேனீ, வண்டு, வீட்டு ஈ, இறகு, அழிவு என அனைத்தையும் குறிப்பிட்டு விடலாம். அதே போல 'ஊ' என்ற அந்த ஒரு சொல்லில் தசை, இறைச்சி, வினையெச்ச விகுதி, ஊண் என அனைத்து சொற்களும் அடங்கும். அதே போல் 'ஏ' என்ற ஒரு வார்த்தையில் பெருக்கம், அடுக்கு, மேல்நோக்கம், அம்பு, ஏவுதல், பிரிநிலை, இசை நிறை என அனைத்தும் அடங்கும்.

No comments:

Post a Comment