2 Dec 2016

பொதுஅறிவு 2011

1. 1923ல் சுவராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் யார் - சி. ஆர். தாஸ், மோதிலால் நேரு

2. கணினி ஒளித்திரையின் புதுப்பிக்கப்படும் வீதத்தை (சுநகசநளா சயவந) அளவிட பயன்படும் அலகு - ஹெர்ட்ஸ்

3. ஒரு இந்தியனின் தலா வருமானம் என்ன - கூ370

4. மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவரை நியமிப்பது - மாநில ஆளுநர்

5. இராஜேந்திர சோழன் இவ்வாறு அழைக்கப்படுகிறார் - கடாரம் கொண்டான்

6. பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2007 - 2012

7. மேல் சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

8. தேக்கு மரங்கள் எக்காடுகளில் காணப்படுகின்றன - அயன மண்டல இலையுதிர் காடுகள்

9. இரத்த பிளாஸ்மா என்பது - இரத்தம் - இரத்த செல்கள்

10. மரபியலின் தந்தை எனப்படுபவர் - மெண்டல்

11. விசை - இடப்பெயர்ச்சி வளைகோட்டின் பரப்பு தருவது - செய்யப்பட்ட வேலை

12. சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1906

13. நிதிக்குழுவை எந்த சட்டத்தின் கீழே ஜனாதிபதி நியமனம் செய்வார் - அரசியல் சாசனத்தின் 280-ம் பிரிவு

14. ப்ரான்ஸ்டட் மற்றும் லவ்ரி கூற்றின்படி அமிலம் எனப்படுவது - புரோட்டான் வழங்கும்

15. கட்டபொம்மனுக்கு எந்த ஆண்டு மரண தண்டனையளிக்கப்பட்டது - அக்டோபர் - 1799

No comments:

Post a Comment