2 Dec 2016

பொதுஅறிவு 2011

1. ‘கீரை வாங்கி வருமாறு தாயார் மகளிடம் கூறினார்’ - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக - அயற்கூற்று வாக்கியம்

2. மாறன் மாட்டை ஓட்டினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக - தன்வினை வாக்கியம்

3. அரசன் கோவிலைக் கட்டினான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக - தன்வினை வாக்கியம்

4. ‘வட்டம்’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - பண்புப்பெயர்

5. ‘மன்றம்’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - இடப்பெயர்

6. ‘வீதி’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - இடப்பெயர்

7. ‘கை’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - சினைப்பெயர்

8. ‘நன்மை’ - பெயர்ச்சொல்லின் வகை அறிக - பண்புப்பெயர்

9. ‘சா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - மரணம்

10. ‘சோ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - உமையம்மை

11. ‘பை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - படம்

12. ‘உ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - ஐந்து

13. ‘த’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது - குபேரன்

14. ‘ஒங்குவாய்’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க - ஒங்கு

15. ‘முட்டாள்’ - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க - முட்டு

No comments:

Post a Comment