2 Dec 2016

மாதிரி வினா விடைகள்

1. 'வீரம் இல்லாத வாழ்வும், விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என்று கூறியவர் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

2. நடுவண் அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற, அப்துல் ரகுமான் எழுதிய நூல் - ஆலாபனை

3. புதுக்கவிதை புனைவதில் புகழ்பெற்றவர் - அப்துல் ரகுமான்

4. 'செர்-யே-பஞ்சாப்" என்று பரவலாக அழைக்கப்படும் இந்தியத் தலைவர் யார் - லாலா லஜபதி ராய்

5. பண்டிட் - விதவைத் திருமணம்

6. 'இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை" எனப்படுபவர் - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

7. திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்

8. திரு.வி.க. பிறந்த ஊர் - தண்டலம்

9. சமுத்திரகுப்தனை, மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடுவதற்கு முக்கியக் காரணம் என்ன - அவரது இராணுவ படையெடுப்புகள்

10. அஜந்தா குகை ஓவியங்கள் எந்த மதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி வரையப்பட்டன - பௌத்தம்

11. சுதந்திர இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்த முதல் இந்திய பெண்மணி யார் - சரோஜினி நாயுடு

12. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்

13. 'உலகத்தில் அதர்மம் பெருகி தர்மம் தடுமாறும் போது நான் அவதரிப்பேன்" இது யாருடைய கூற்று - கிருஷ்ண பரமாத்மா

14. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்

15. 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு" என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்

16. திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

17. குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

18. தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

19. அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

No comments:

Post a Comment