1 Dec 2016

நாமக்கல் கவிஞர்

வாழ்க்கைக்குறிப்பு:

இயற் பெயர் = இராமலிங்கம் பிள்ளை
பெற்றோர் = வேங்கடராம பிள்ளை, அம்மணி அம்மாள்
ஊர் = நாமக்கல்
காலம் = 19.10.1888-24.08.1972
சிறப்பு பெயர்கள்:

நாமக்கல் கவிஞர்
காந்தியக் கவிஞர்
ஆஸ்தானக் கவிஞர்
காங்கிரஸ் புலவர்
புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)
நூல்கள்:

அவனும் அவளும்(காப்பியம்)
இலக்கிய இன்பம்
தமிழன் இதயம்(கவிதை தொகுப்பு)
என் கதை(சுய வரலாறு)
சங்கொலி(கவிதை தொகுப்பு)
கவிதாஞ்சலி
தாயார் கொடுத்த தனம்
தேமதுரத் தமிழோசை
பிரார்த்தனை
இசைத்தமிழ்
தமிழ்த் தேர்
தாமரைக்கண்ணி
கற்பகவல்லி
காதல் திருமணம்
நாவல்:

மலைக்கள்ளன்
உரைநடை நூல்கள்:

கம்பரும் வான்மீகியும்
நாடகம்:

மாமன் மகள்
சரவண சுந்தரம்
மொழிப்பெயர்ப்பு நூல்:

காந்திய அரசியல்
இதழ்:

லோகமித்திரன்
குறிப்புகள்:

இவர் செயலால் காந்தியடிகளையும், பாட்டால் பாரதியையும் தம் குருவாக ஏற்றுக்கொண்டவர்
இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்
சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால்(பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர்
இவர் சிறந்த ஓவியர்
இவர் முதன் முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்
அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்குப் பாரத மாத முடிசூட்டுவது போல் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
இவரின் பாடல்களைக் தொகுத்து வெளியிட்டவர் = தணிகை உலகநாதன்
சிறப்பு:

இவர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்
இராசாசி = திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது
இராசாசி = இந்தச் சமயத்தில் பாரதி இல்லையே என்று ஏங்கினேன் அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்
பாரதி = பலே பாண்டியா, நீர் ஒரு புலவர், ஐயமில்லை
“நாட்டுக்கும்மி” என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களை எழுதி, சேலம் ��

No comments:

Post a Comment