1 Dec 2016


பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு:

இவரின் இயற்பெயர் = சுப்பிரமணியம்
ஊர் = எட்டயபுரம்
பெற்றோர் = சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள்
மனைவி  = செல்லம்மாள்
காலம் = 11.12.1882-11.09.1921(39 ஆண்டுகள்)
புனைப் பெயர்கள்:

காளிதாசன்
சக்திதாசன்
சாவித்திரி
ஓர் உத்தம தேசாபிமானி
நித்திய தீரர்
ஷெல்லிதாசன்
சிறப்பு பெயர்கள்:

புதுக் கவிதையின் முன்னோடி
பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
தேசியக்கவி
விடுதலைக்கவி
அமரக்கவி
முன்னறி புலவன்
மகாகவி
உலககவி
தமிழ்க்கவி
மக்கள் கவிஞர்
வரகவி
உரைநடை நூல்கள்:

ஞானரதம்(தமிழின் முதல் உரைநடை காவியம்)
தராசு
சந்திரிகையின் கதை
மாதர்
கலைகள்
கவிதை நூல்கள்:

கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாஞ்சாலி சபதம்
காட்சி(வசன கவிதை)
புதிய ஆத்திச்சூடி
பாப்பா பாட்டு
பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
பாரததேவியின் திருத்தசாங்கம்
விநாயகர் நான்மணிமாலை
சிறுகதைகள்:

திண்டிம சாஸ்திரி
பூலோக ரம்பை
ஆறில் ஒரு பங்கு
ஸ்வர்ண குமாரி
சின்ன சங்கரன் கதை
நவதந்திரக்கதைகள்
கதைக்கொத்து(சிறுகதை தொகுப்பு)
நாடகம்:

ஜெகசித்திரம்
பொதுவான குறிப்புகள்:

எட்டயப்புர சமஸ்தானப் புலவர்கள் “பாரதி” என்ற பட்டம் அளித்தனர்
தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார்
தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடற்கு அளித்தவர்
தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்
1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார்
கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார்
சுதேசி மித்திரன் என்ற இதழின் துணையாசிரியர் ஆக பணிப்புரிந்தார்
”இந்தியா”  என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
சென்னை ஜனசங்கம் என்�

No comments:

Post a Comment