20 Dec 2016

TNPSC மாதிரி வினா விடைகள் 20/12/16

1. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா எது? - கார்பெட் தேசிய பூங்கா

2. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது எது? - பேரிச்சை மரம்

3. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1983

4. டுசோகி என்னும் புல் எத்தனை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது? - 2

5. தேசிய வனச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1894

6. ஒரு கூலும் என்பது - 6 X 10^18

7. எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு .......................... மரபு மின்னோட்டத்தின் திசையாகும். - எதிர்திசை

8. 'மதில் மேல் பூனை போல" என்பதற்கு உவமையால் விளக்கப்பெறும் பொருள் தருக. - உறுதியற்றது

  9. பசிநோய் சாபம் பெற்ற காயசண்டிகையை அந்நோயிலிருந்து நீக்கியவர் - மணிமேகலை

10. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் பெயர் சொல்லை வினைச் சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுப்பது - சொல்லிசை அளபெடை

11. 'நாடகமேத்தும் நாடகக் கணிகை" என குறிப்பிடுபவர்? - இளங்கோவடிகள்

12. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு இக்குறளில் இடம் பெற்றுள்ள வாய்ப்பாடு? - பிறப்பு

13. மானுடப்பிறப்பினுள் மாதா உதிரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் - என கருவுருதல் பற்றி பாடியவர்? - மாணிக்கவாசகர்

14. வரதன் என்ற இயற்பெயரைக் கொண்ட புலவர் யார்? - காளமேகப்புலவர்

15. எடுத்தல், தொடுத்தல், முடித்தல் என்பது எக்கலையின் முக்கூறுகளாக கூறப்படுகிறது? - பேச்சுக்கலை

16. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனிநபர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - நீடா அம்பானி

17. 2020-ல் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், எத்தனை விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன? - 5

18. ஆசியா கண்டத்தின் 20ம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர் யார்? - எம்.எஸ். சுவாமிநாதன்

19. என்னுடைய ஒலிம்பிக் பயணம் (MY OLYMPIC JOURNEY ) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? - திக்விஜய் சிங் தியோ

20. கீழ்கண்ட தொடரில் எந்த ஒரு எண் மற்ற மூன்று எண்களிலிருந்து வேறுபடுகிறது?
333,621, 927, 356

விடை: 356

No comments:

Post a Comment