4 Dec 2016

DECEMBER 04 NATIONAL NAVY DAY

தேசிய கடற்படை தினம் DECEMBER 04

     இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியா, மூன்று பக்கம் கடலால் சு ழப்பட்ட நாடு. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக கடற்படை வரிசையில் இந்திய கடற்படை ஐந்தாவது இடத்தில் உள்ளது.

     1971ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 'ஆப்ரேஷன் டிரிடென்ட்" என்ற பெயரில் டிசம்பர் 4ஆம் தேதி போர் நடந்தது. இதில் இந்திய கடற்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான, கராச்சி மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நினைவுபடுத்தும் விதமாகவும், இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் கடற்படை சார்பில், டிசம்பர் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment