15 Dec 2016

Cyclones and its naming procedure

புயல்களும் பெயர் காரணமும்

சர்வதேச அளவில், புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம், 1953ல், அட்லாண்டிக் கடற்பகுதியில் துவங்கியது. உலக வானிலை அமைப்பு மூலம் கடல்களின் அடிப்படையில், 10 வகை பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன.

கரீபியன் கடல், வடக்கு மெக்சிகோ, வடகிழக்கு பசிபிக் பெருங்கடல், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், வடமேற்கு பசிபிக், தென் சீனக் கடல், ஆஸ்திரேலியா, வட இந்திய பெருங்கடல், தென் மேற்கு இந்திய பெருங்கடல் போன்றவற்றை சார்ந்த நாடுகளை இணைத்து, பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது

வட இந்திய பெருங்கடலின் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், மாலத்தீவு, ஏமன், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் சார்பில், 2014ல், ஒவ்வொரு நாடும், தலா எட்டு வீதம், 64 பெயர்களை பதிவு செய்துள்ளன. இதுவரை, 46 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

வட இந்தியபெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, ஆங்கில எழுத்துகளின், ஏ, பி, சி, அகர வரிசையில், முதலில், பங்களாதேஷ் என்ற வங்கதேசம் வழங்கிய பெயர் வைக்கப்படும். பின், முறையே இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, கடைசியில், தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் வைக்கப்படும். கடந்த ஆண்டின் கடைசி புயலுக்கு, இந்தியா வழங்கிய, 'மேக்' என்ற, மேகம் பெயர் வைக்கப்பட்டது.

முதலை புயல்

இந்த ஆண்டு, தென் மேற்கு பருவமழை காலத்தில், மே மாதம் உருவான முதல் புயலுக்கு, மாலத்தீவு வைத்த, 'ரோனு' என்ற பெயர் சூட்டப்பட்டது.தொடர்ந்து, நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான முதல் புயலுக்கு மியான்மரின்,மொழியில், முதலை என்றபொருளில், 'கியான்ட்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த புயல், மியான்மரை தாக்கியது.

 
பெருந்தன்மை புயல்

நவம்பர் உருவான அடுத்த புயலுக்கு, ஓமன் நாடு வழங்கிய, 'நாடா' என்ற அரபி மொழி பெயர் வைக்கப்பட்டது. இதற்கு, ஆசீர்வதிக்கப்பட்ட மழைத்துளி என்று பொருள். பெருந்தன்மை என்றும் அழைக்கப்பட்ட இந்த புயல், கடந்த வாரம் காரைக்கால் அருகே கரையை கடந்து, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு பரவலாக மழையை கொடுத்தது. பெரும் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமல் பெயருக்கு ஏற்ப பெருந்தன்மையாய் அரபிக்கடலில் தஞ்சமானது.

 

பாகிஸ்தானின் சிவப்பு ரோஜா

டிசம்பர் 12ம் தேதி சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடிய 'வர்தா' புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சூட்டிய இந்த பெயருக்கு, அரபி மொழியில், ' சிவப்பு ரோஜா மலர் என, அர்த்தம். இது, டிசம்பர் 6ல் உருவாகி, 12ல் கரையை கடந்தது. இதனால் பல ஆயிரம் கோடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வருது மாருதா புயல்

வர்தா புயலால் இயல்பு நிலை இன்னும் திரும்பாத நிலையில் இந்திய பெருங்கடலில் விரைவில் புயல் ஒன்று உருவாக உள்ளது. இந்த புயலுக்கு புயலுக்கு, இலங்கை வழங்கிய, 'மாருதா' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment