2 Dec 2016

வரலாறு - இந்தியாவின் புவியியல் கூறுகளும், வரலாற்றில் அவற்றின் தாக்கமும்.

1. பொதுவாக வரலாற்றுக்கு எத்தனை கண்கள் உண்டு எனக் கூறுவர் - இரண்டு

2. வரலாற்றின் இரண்டு கண்கள் யாவை - காலம் மற்றும் புவியியல் அமைப்பு

3. ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை அதன் ................ கூறுகளே பெரிதும் நிர்ணயிக்கின்றன - புவியியல்

4. இந்தியாவில் (தற்போது) எத்தனை மாநிலங்கள் உள்ளன - 28

5. இந்தியாவில் (தற்போது) உள்ள யூயனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 6

6. இந்தியாவின் வடக்குப் பகுதியில் ............... அமைந்துள்ளன - இமய மலைகள்

7. இமய மலையின் நீளம் எவ்வளவு - 2560 கிலோ மீட்டர்

8. இமய மலையின் சராசரி அகலம் எவ்வளவு - 240 முதல் 320 கிலோ மீட்டர்

9. இமயத்தின் மிக உயரமான சிகரம் எது - எவரெஸ்ட்

10. கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு - 8869 மீட்டர்

11. இந்தியாவை பாதுகாக்கும் இயற்கை அரணாக ................ மலைகள் திகழ்கின்றன - இமய மலை

12. காஷ்மீருக்கு வடக்கே ............ மலைத்தொடர் உள்ளது - காரகோரம்

13. கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா ஆகிய மூன்று முக்கிய நதிகள் பாயும் பகுதியே .................... என்று அழைக்கப்படுகிறது - இந்தோ - கங்கை சமவெளி

14. இமய மலைகளுக்கு அப்பால் ............. நதி உற்பத்தியாகிறது - சிந்து நதி

15. சிந்து நதியால் மிகவும் பயன்பெறுவது ............. சமவெளியாகும் - பஞ்சாப்.

No comments:

Post a Comment