1 Dec 2016

முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு:

இயற் பெயர் = துரைராசு
ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
வேறு பெயர்கள்:

கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
நூல்கள்:

முகில் விடு தூது
தாலாட்டுப் பாடல்கள்
கவியரங்கில் முடியரசன்
முடியரசன் கவிதைகள்
பாடுங்குயில்
காவியப்பாவை
ஞாயிறும் திங்களும்
மனிதனைத் தேடுகிறேன்
பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
வீரகாவியம்(தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாடகம்:

ஊன்றுகோல்(பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)
குறிப்பு:

காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது
சிறப்பு:

அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்
பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்
பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது
மேற்கோள்:

இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
பிணவினையில் தமிழுண்டோ.

No comments:

Post a Comment