18 Dec 2016

= ராஜஸ்தான் மாநில அரசு Annapurna Rasoi எனும் மலிவு விலை உணவகத்தை ,அம்மாநிலத்தில் 12 இடங்களில் துவங்கியுள்ளது

= கனடாவைச் சேர்ந்த ப்ளாக்பெரி நிறுவனம், தனது மொபைல் ஃபோன் உற்பத்தி செய்யும் உரிமைகளை சீனாவின் டி.சி.எல் (TCL) நிறுவனத்துக்கு விற்றுள்ளது

= 15 முறையாக நடக்க உள்ள புனே சர்வதேச திரைப்பட திருவிழா வரும் ஜனவரி மாதம் 2017ல் நடக்க உள்ளது. இத்திருவிழாவை புனே மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலமும் இணைந்து நடத்த உள்ளது

= தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளமான 96,000 கி.மீ. இருந்து 2 லட்சம் கி.மீ. ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது

= இந்த ஆண்டிற்கான Digital India Silver விருதினை கோயம்புத்தூர் மாநகராட்சி பெற்றுள்ளது

= நால்கோ நிறுவனமும் தேசிய அனல்மின் கழகமும் இணைந்து 2400 MW திறன்கொண்ட புதிய அனல் மின் கழகத்தை ஒடிசா மாநிலம் கஜ்மாரா வில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளகொண்டுள்ளன

= பாண்டிச்சேரியை சேர்ந்த நாசர் என்பவர், இந்தியாவிலேயே முதலாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் முழு உருவ சிமெண்ட் சிலை நிறுவியுள்ளார்.

No comments:

Post a Comment