16 Dec 2016

2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை  வெளியிட்டுள்ளது.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, உலகின் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜீ ஜின்பிங் (4வது இடம்), போப் பிரான்சிஸ் (5வது இடம்) ஆகியோர் உள்ளனர்.

பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment