3 Dec 2016

பொது அறிவு - பத்தாம் வகுப்பு - அறிவியல்

1. பசுமை வேதியியல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - 1995

2. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள முதல் உறுப்பினர்? - தாவரங்கள்

3. ஒரு கரைசலின் துகள்கள் நுண்ணோக்கி வழியே தெரிவதால் அக்கரைசல் ------------- எனப்படும் - கூழ்மக் கரைசல்

4. ஒரு வெப்பம் கொள் செயல் முறையில் வெப்பநிலையை -------------- போது கரைதிறன் அதிகரிக்கிறது. - அதிகரிக்கும்

5. ஐசோடோப்புகள் ------------ அணு எண்களைப் பெற்றுள்ளன - ஒத்த

6. ஓசோன் ஒரு -------------- மூலக்கூறு ஆகும் - மூவணு

7. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோலார் பருமன் என்பது --------------- லிட்டர் - 22.4

8. உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரியும் போது வெளிப்படும் வாயு? - ஹைட்ரஜன்

9. நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான அமிலம்? - ஹைட்ரோ குளோரிக் அமிலம்

10. சலவைப் பொருள்கள் நீரில் கரையும் வினை? - வெப்பம் உமிழ் வினை

11. அமில, காரங்களுக்கிடையேயான வினை? - நடுநிலையாக்கல் வினை

12. கால்சியம் ஹைட்ராக்ஸைடின் பயன்? - கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்க பயன்படுகிறது

13. வெள்ளியின் வளிமண்டலத்தில் காணும் அமிலப் பொருள்? - கந்தக அமிலம்

14. உணவுப் பொருள்களில் உள்ள அமிலங்கள்? - கரிம அமிலங்கள்

15. துணிகளிலுள்ள எண்ணெய் கரை மற்றும் பிசுக்களை நீக்கப் பயன்படுவது? - அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு


No comments:

Post a Comment