2 Dec 2016

வரலாறு - வரலாற்றுக்கு முந்தையகால இந்தியாவும் ஹரப்பா பண்பாடும்

1. புதிய கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் ............ கற்காலம் எனப்பட்டது - செம்பு கற்காலம்

2. செம்பு கற்காலத்தில் எந்தெந்த உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன - செம்பு மற்றும் வெண்கலம்

3. ஆற்றங்கரைகளிலேயே எந்த கற்கால பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன - செம்பு கற்காலம்

4. ஹரப்பா பண்பாடு ............ கற்காலப் பயன்பாட்டின் ஒரு பகுதியாகும் - செம்பு கற்காலப் பயன்பாட்டின்

5. தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன - பையம்பள்ளி

6. செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் எது - இரும்பு காலம்

7. தென்னிந்தியாவில், இரும்புக் காலமும் பெருங்கல் காலமும் ............. எனக் கருதப்படுகிறது - சமகாலம்

8. மெகாலித் என்ற சொல்லின் பொருள் என்ன - பெரிய கல்

9. எந்த இரு இடங்களில் முதன்முதலில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன - ஹரப்பா மற்றும் மொகஞ்சாதாரோ

10. ஹரப்பா மற்றும் மொகஞ்சாதாரோ ஆகிய இடங்கள் தற்பொழுது எங்கு உள்ளன - பாகிஸ்தான்

11. சிந்துவெளி நகரங்களிலேயெ மிகப் பெரியது எது - மொகஞ்சாதாரோ

12. ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலையை எங்கு காணலாம் - கிழக்கு பலுச்சிஸ்தான்

13. ................ அகழ்வாய்வுகள் அங்கிருந்த நகர அமைப்புகளையும், நகர்ப்புறக் கூறுகளையும் நன்கு வெளிப்படுத்துகின்றன - காலிபங்கன்

14. வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்கும் வகையில் மிகப்பெரிய தடுப்புச் சுவரை எந்த நகரில் காணமுடிகிறது - லோத்தல்

15. மெசடோமியா, இந்தியாவின் பிறபகுதிகள் ஆகியவற்றுக்கிடையிலான மிகப் பெரிய வாணிப மையமாக ............... திகழ்ந்தது - லோத்தல்

No comments:

Post a Comment