16 Dec 2016

மலேஷிய நாட்டின், 15வது மன்னராக சுல்தான் முகமது நேற்று பதவியேற்றுள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியா, பிரிட்டனிடமிருந்து, 1957ம் ஆண்டு, சுதந்திரம் பெற்றது. பிரிட்டனிடம் அடிமையாவதற்கு முன், மலேஷியாவில் மன்னராட்சி நடந்து வந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும், மலேஷியாவில், ஒன்பது மாகாணங்களின் மன்னரும், சுழற்சி முறையில், மலேஷியாவின் மன்னராக, ஐந்து ஆண்டுகள் இருப்பர். மலேஷியாவின் மன்னராக இருந்த சுல்தான் அப்துல் ஹலிம் முட்ஜம்,  பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய மன்னராக, கேலன்டன் மாகாண மன்னர், சுல்தான் முகமது,  தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment