2 Dec 2016

#அக்டோபர் மாதத்திற்கான முக்கிய தினங்கள் ஒரு #கற்பனைக் கதை
---------------------------------------------------------------------------
1-14 காந்தி
15-24 அப்துல்கலாம்னு ஞாபகம் வச்சிக்கோங்க
--------------------------------------------------------------------------
1 முதியோர்னு சொன்னதும் ஞாபகம் வருவது(1-முதியோர் தினம்)
2 காந்தி தான் (2- அகிம்சை தினம்)
ஐந்து ஆசிரியர்களுக்கு அறுசுவை உணவு பாதுகாப்பா கொடுத்து எட்டாத தூரத்திற்கு விமானத்தில அனுப்பனும் னு தான் ஆசைப்பட்டார் (5 - ஆசிரியர் தினம், 6- உணவு பாதுகாப்பு தினம், 8- இந்திய விமானப்படை தினம்)
9-10 னு வரிசைக்கா தபால் குடுக்கச் சொன்னார் 10-க்கு தபால் கொடுத்துவிட்டு மீண்டும் 10-க்கு தபால் கொடுத்தா மனம் நலம் சரியில்லனு சொன்னார் (9 - தபால் நிலைய தினம், 10- தேசிய தபால் தினம் & மனநல தினம்)
பதினோரு பேர குழந்தைகள இறுதியாக உலக தர வரிசையில் இடம்பெற செய்தார் (11 - பெண் குழந்தைகள் தினம், 14 - உலக தர அமைப்பு தினம்)
15.அப்துல்கலாம் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாள்
பதினாறு வகை செல்வங்களுடன் உணவளித்து பதினேழு வகையான வறுமையும் ஒழித்து அதை 2010-ல் புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டார் (16 - உலக உணவு தினம், 17 - வறுமை ஒழிப்பு தினம், 20 - புள்ளியல் தினம் (2010= 20/10))
21 வயதுள்ள இளைஞனுக்கு நல்ல அயோடின் சத்து கொடுத்து 24 வயதில் போலியோ ஒழித்து ஐ.நா அரங்கில் இடம் பெற செய்தார் (21 - அயோடின் குறைபாடு தினம், 24 - போலியோ தினம் & ஐ.நா.தினம்)
இனி மாதம் கடைசி
கையில் காசு இல்லை என அபாயத்தை குறைக்க வேண்டும்(29- தேசிய பேரிடர் அபாய குறைப்பு நாள்)
சிக்கனமா இருக்கனும் (30- சிக்கன நாள்)
அப்போதான் குடும்பத்துல ஒற்றுமையா இருக்க முடியும் (31 - ஒருமைப்பாடு & ஒற்றுமை தினம்)

No comments:

Post a Comment