25 Nov 2016

பொது அறிவு வினா விடைகள்

1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? - 12,500

2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886.

3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரத்தை அறிய இயலும் ? 20 கிமீ

4.கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்? உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.)

5.அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி

6.மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ? ஹோவாங்கோ ஆறு

7.வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்? ஹர்ஷர்

8.இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்? சமுத்திர குப்தர்

9.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்? ரஸியா பேகம்

10.உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ? இந்தோனேசியா

11.மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது? தென்னாப்பிரிக்கா

12.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? டென்மார்க்

13.கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? இங்கிலாந்து

14.காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? பிரிட்டன்.

15.எமர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? ஷா கமிஷன்

16.சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது? நானாவதி கமிஷன்

17.நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது? சாக்ளா கமிஷன்

18.நேதாஜி சுபாஷ் சந்திர போஸை பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை? ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்

19.அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் எது ? லிபரான் கமிஷன்

20.சேதுசமுத்திரம் கால்வாய் பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது? ஆர். கே. பச்சோரி கமிட்டி

21.ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? ஜெயின் கமிஷன்

22.பிற்படுத்தபட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்? மண்டல் கமிஷன்

23.இந்தியாவின் பரப்பளவு? 32,87,263 ச.கி.மீ

24.வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ? 3214 கி.மீ.

25.மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்? 2933 கி.மீ.

No comments:

Post a Comment