2 Dec 2016

GK School Book Questions & Answers

1. சூடோமோனாஸ் புடிடா ----------------- வடிவம் கொண்ட சாறுண்ணியாகும் - கோல் வடிவம்

2. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்து குடிநீர் பெறுவதற்குத் தகுந்த முறை? - தலைகீழ் சவ்வூடு பரவல்

3. உலகளவில் அதிக வெப்பமான நாளாக ---------------- ஆம் ஆண்டு ஜீலை மாதத்தைக் கூறுகின்றனர் - 1998

4. ஆக்டினியம் தனிமத்தைத் தொடர்ந்து உள்ள பதினான்கு தனிமங்கள் உள்ளடக்கிய தொடர் -------------------- என்றழைக்கப்படுகிறது - ஆக்டினைடு வரிசை

5. இடைநிலைத் தனிமங்கள் என்பது - நிக்கல்

6. காலியம் என்ற உலோகத்தின் உருகுநிலை? - 29.8° C

7. உலோகங்களில் அதிக மின்கடத்து திறன் பண்புடையது ----------------- ஆகும். - வெள்ளி

8. அறை வெப்பநிலையில் நீர்மமாகவும், மிகக் குறைந்த உருகுநிலை உடைய உலோகம் ------------- ஆகும் - பாதரசம்

9. நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உள்ள விலங்கு? - மான்

10. தாவரங்களில் சைலத்தின் பணி? - நீரைக் கடத்துதல்

11. சூழ்நிலைத் தொகுப்பில் சிதைப்பவைகள் - பாக்டீரியாக்கள்

12. மேகங்களைத் தூண்டி செயற்கையாக மழைபொழிய உதவும் வேதிப் பொருள்? - பொட்டாசியம் அயோடைடு

13. மயில்கள் சரணாலயம் உள்ள இடம்? - விராலி மலை

14. அணில்கள் சரணாலயம் உள்ள இடம்? - விருதுநகர்

15. நிலக்கரியில் அதிகம் உள்ள தனிமம்? - கார்பன்

No comments:

Post a Comment