13 Dec 2016

வேதங்கள்

☄வேதம்-என்பதன் பொருள்=அறிவு நூல்
☄இதன் வேறு பெயர்-மறை
☄இதன் மறு பெயர்-சுருதி

🎄காரணங்கள்:
1.தெய்வீகமான கருத்துகளைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது.
2.ஆசிரியரிடம் கேட்டுத்தெளிய வேண்டிய நூலாதலால் இதனைச் சுருதியெனவும் கூறுவர்.

🌴இதனை வியாசர் நான்காக வகுத்துள்ளார்.
🌴இதனை ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்-மாக்ஸ்முல்லர்.
🌴வேதங்களின் உரைநடை என்பது -பிராமணங்கள்.
🌹ரிக் வேதம்
☄ரிக்-என்பதற்கு துதித்தல் (அ) வழிபடல் என்பது பொருள்
☄இதன் வேறு பெயர்-சம்கீதாஸ்
☄இது மிகவும் பழமையான வேதம்.
☄இதன் பாகம் (அ) மண்டலம்=10பாகம் (அ)10 மண்டலம்.
☄இதன் பாடல்கள்(அ)மந்திரங்கள்=1028-மந்திரங்கள்.
☄இதிலுள்ள கடவுள்களின் எண்ணிக்கை=33.
☄இதில் கயாத்திரி மந்திரம் 3-வது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது.
☄காயத்ரி மந்திரத்தை எழுதியவர்-விஸ்வாமுத்திரர்
☄இதில் ஓம்-என்ற மந்திரம் இடம்பெற்றுள்ளது.

🌹யஜீர் வேதம்.
☄யாஜ்-என்பதற்கு யாகம் என்று பொருள்.
☄யாகம்,பலி,தானம் ஆகியன செய்யும் முறை பற்றி கூறியுள்ளது.
☄அமாவாசை,பௌர்ணமி காலங்களில் செய்யவேண்டிய வேள்விகள்   பற்றி கூறுகிறது.
☄பிதுர்கர்மம் செய்யும் விதம் பற்றியும் கூறுகிறது.

🌹ஸாம வேதம்.
☄ஸாமம் என்னும் இன்னிசையால் பாடப்பெற்றது.
☄பாபத்தை நீக்கிப் பலனைக் கொடுக்கும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

🌹அதர்வண வேதம்.
☄இது மந்திரம் உச்சரிக்கவேண்டிய முறைகளை பற்றி கூறுகிறது.
☄விரோதிகளின் அழிவின் பொருட்டுச் செய்ய வேண்டிய கிரியா முறை பற்றியும் கூறுகிறது.

🌷உபவேதங்கள் நான்கு🌷

👍பொருத்துக.
1.ரிக்-துதித்தல் பற்றியது.
2.யஜீர்-யாகம் பற்றியது.
3.ஸாமம்-இசை பற்றியது
4. அதர்வணம்-மந்திரம்,தந்திரம் பற்றியது.
👍பொருத்துக.(உபவேதம்).
1.ஆயூர்வேதம்-மருத்துவம் பற்றியது.
2.தனூர் வேதம்-சண்டை பயிற்சி பற்றியது.
3.காந்தர்வவேதம்-பாடல் கலை பற்றியது.
4.சில்ப வேதம்-கட்டிடகலை பற்றியது.

No comments:

Post a Comment