16 Dec 2016

விளையாட்டு செய்திகள்

Improved Player of the Year award  - 2016

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் மற்றும்  சீன ஓபன்  பேட்மிண்டன் கோப்பை வென்றது , உலக சூப்பர் சீரிஷ் போட்டிக்கு தகுதி பெற்றது , தரவரிசையில் 12வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியது ஆகிய காரணங்களுக்காக சர்வதேச பேட்மிண்டன் அமைப்பு P.V. சிந்துவிற்கு  Most Improved Player of the Year award ஐ வழங்கியுள்ளது.

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் சார்பில் , சாய்னா நேவல் ( Integrity Ambassador for Clean Sports )  நேர்மையான விளையாட்டு தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற 11வது உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்சிப் போட்டியில்  (150-Up format)  இந்தியாவின் பங்கஜ் அத்வானி , சிங்கப்பூரின் பீட்டர் ஜில்கிரிஷ்டை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பங்கஜ் அத்வானி வெல்லும் 16வது பட்டம் இதுவாகும்.

Ballon d'Or Award - 2016

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்குரிய " பாலோன் டி " தங்கப்பந்து விருது, போர்சுகல் அணியின் கேப்டன் ' கிறிஸ்டியானோ ரொனால்டோ வுக்கு '  4வது முறையாக  (  2008, 2013, 2014, 2016 ) வழங்கப்பட்டுள்ளது.

[ அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012 , 2015 ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார் ]

No comments:

Post a Comment