1 Dec 2016

#சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் இலக்கியங்கள்:

1955 - தமிழ் இன்பம் - ரா. பி. சேதுப்பிள்ளை (#சேது-க்கு தன் பிள்ளையை பார்த்ததும் இன்பம் தாங்க முடியல)

1956 - அலை ஓசை - கல்கி கிருஷ்ணமூர்த்தி (#அலை கல்-ல பட்டா ஓசை வரும் )

1958 - சக்கரவர்த்தித் திருமகன் - சி. ராஜகோபாலச்சாரி (#ராஜா - சக்கரவர்த்தி)

1961 - அகல் விளக்கு - மு.வரதராசனார் (#தேர்வுல முன்னாடி வரனும்னா கரண்ட் போனாலும் விளக்கு வைச்சி படிக்கனும்)

1962 - அக்கரைச்சீமை - சோமு (#கறை பட்டா சோப்புப் போடனும் )

1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (#வேங்கையின் மைந்தன் அகிலத்தை ஆண்டவன்)

1965 - ஸ்ரீ ராமானுஜர்  - பி. ஸ்ரீ ஆச்சார்யா (#ராமானுஜர் ஆச்சாரியரா இருந்தாரு)

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம. பொ. சிவஞானம் (#வள்ளலார கண்டா ஞானம் கிடைக்கும் )

1967 - வீரர் உலகம் - கி. வா. ஜகன்னாதன்(#ஜகரத்தன் மஹாபாரதத்தில வரும் சிறந்த வீரன்)

1968 - வெள்ளைப் பறவை - அ. சீனிவாச ராகவன் (#சீனி வெள்ளை தநிறமா இருக்கும்)

1969 - பிசிராந்தையார் - பாரதிதாசன்

1970 - அன்பளிப்பு - கு. அழகிரிசாமி(#அழகா இருக்குறவங்கள பார்த்தா அன்பளிப்பு கொடுக்கத் தோனும்)

1971 - சமுதாய வீதி  - நா. பார்த்தசாரதி (#சமுதாய வீதி-ல போறப்போ எல்லாரையும் பார்த்துட்டே போவோம்)

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள்  - ஜெயகாந்தன் (#சில மனிதர்களுக்கு சில நல்ல நேரங்களில் தான் ஜெயம் கிடைக்கும்)

1973 - வேருக்கு நீர்- ராஜம் கிருஷ்ணன் (#வேருக்கு நீர் ஊத்தனும்-னு கிருஷ்ணர் சொன்னார்)

1974 - திருக்குறள் நீதி இலக்கியம்- கே. டி. திருநாவுக்கரசு (திரு - திரு)

1975 - தற்கால தமிழ் இலக்கியம்  - ஆர். தண்டாயுதம் (#இந்த கலி காலத்தில தமிழ் இலக்கியம் இயற்றினா தண்டனை கொடுப்பாங்க)

1977 - குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி (#இரத்தம் வர்றத இந்திரா பார்த்துட்டாங்க)

No comments:

Post a Comment