9 Dec 2016

நடப்பு நிகழ்வுகள் 08 DECEMBER 2016

தமிழகம்

1.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தைத் திருத்தி அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா

1.ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான புதிய முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் நிதின் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடுத்த மாதம் ஜனவரி 4-ஆம் தேதி   பதவியேற்க உள்ளார்.

3.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம்   தேதியை தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட உள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

4.டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகளுக்கு ரூ. 2000 வரை பரிவர்த்தனைக்கு சேவை வரி கிடையாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

விளையாட்டு

1.ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இவர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

2.“கோபா சுடமெரிக்கானா’ கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காகச் செல்லும் போது விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் கிளப் அணியான சாபேகோயென்ஸ் கால்பந்து அணிக்கு அந்தப் போட்டியின் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

3.11-ஆவது எஃப்ஐஹெச் இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி லக்னெளவில் இன்று தொடங்கியது. இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று (DECEMBER 08) பனாமா நாட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

2. சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்ட நாள் 08 டிசம்பர் 1985.

3.சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென முடிவெடுக்கப்பட்ட நாள் 08 டிசம்பர் 1991.

4.இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்ட நாள் 08 டிசம்பர் 1864.

No comments:

Post a Comment