26 Nov 2016

திருலோக்கி கல்வெட்டுகள்:

முதலாம் ராஜேந்திர சோழன் வடஇந்தியாவில் கங்கை வரை போர் தொடுத்து வெற்றி பெற்றதற்கு ஆதாரமாக விளங்கிய திருலோக்கி கல்வெட்டுகள், கோயில் கும்பாபிஷேகத்தின்போது வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளதால் வரலாற்று ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தனது தந்தை ராஜராஜ சோழன் போன்று முதலாம் ராஜேந்திர சோழனும் சிறந்த ஆட்சி நிர்வாகம் புரிந்ததுடன், தன்னுடைய படை பலத்தின் மூலம் பல சிற்றரசர்களை வென்று தனது பேரரசை விரிவுபடுத்தினார். அதன்படி, கி.பி.1012-1044-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை போரில் வெற்றி பெற்று, கங்கை நதிநீரைக் கொண்டுவந்து, முதலில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்ட திருலோக்கி என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு வந்து அங்கு உள்ள இறைவனை வழிபட்டுள்ளார்.

அதன் பின்னரே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ள சோழபுரத்துக்குச் சென்று அங்கு அழகிய சிவன் கோயிலை எழுப்பி, அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஆதாரமாக திரு லோக்கி கைலாசநாதர் கோயிலில் கல்வெட்டுகள்
(திருலோக்கி கல்வெட்டுகள்)

பொறிக்கப் பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் வரலாறு உலகுக்குத் தெரியவந்தது

No comments:

Post a Comment