24 Nov 2016

6ம் வகுப்பு - அறிவியல்
முதல் பருவம்

4. காந்தவியல்:

1. தெரிந்த மாறாத அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டு பார்ப்பது.....?   அளவீடு

2. நீளத்தின் அலகு...? மீட்டர்

3. நிறையின் அலகு....?  கிலோகிராம்

4. காலத்தின் அலகு....? வினாடி

5. ஒரே மாதிரியான அளவீட்டை தரும் அளவு....?  திட்ட அளவீடு

6. திட்ட அளவீட்டில் பயன்படுத்தப்படும் அலகுகள்....? திட்ட அலகுகள் ( மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை )

7. நீளம், நிறை, காலம் போன்றவை....?  அடிப்படை அளவுகள்

8. அடிப்படை அளவுகளை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகுகள்....? அடிப்படை அலகுகள்

9. பன்னாட்டு அலகுமுறை (S I அலகுமுறை ) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு...?  1960

10. இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு....? நீளம்

11. நீளத்தின் SI அலகு...?  மீட்டர்

12. நீளத்தின் பன்மடங்கு.....? கிலோமீட்டர்

13. நீளத்தின் துணைப் பன்மடங்குகள்....?
மில்லி மீட்டர், சென்டிமீட்டர்

14. ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவு....?  நிறை

15. நிறையின் SI அலகு....? கிலோகிராம்

16. நிறையின் பன்மடங்குகள்....? குவிண்டால், மெட்ரிக் டன்

17. நிறையின் துணைப் பன்மடங்குகள்....? மில்லிகிராம், கிராம்

18. இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட கால அளவு....?
நேரம் / காலம்

19. காலத்தின் SI அலகு...? வினாடி

20. காலத்தின் பன்மடங்குகள்....?  நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு

21. காலத்தின் துணைப் பன்மடங்குகள்....? மில்லி வினாடி, மைக்ரோ வினாடி

22. சூரியனின் நிறை...? 1.99 * 10^30 கிலோகிராம்

23. பூமியின் நிறை...?
5.98 * 10^24 கிலோகிராம்

24. பூமியின் நிறையைப் போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது....

25. நேரத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருப்பது....?  ஓய்வு நிலை

26. நேரத்தைப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவது....? இயக்கம்

27. ஒரு பொருள் நேர்கோட்டுப் பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம்...?  நேர்கோட்டு இயக்கம்

28. ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம்....? வட்ட இயக்கம்

29. ஒரு குறிப்பிட்ட அச்சைப் பற்றிச் சுழலும் பொருளின் இயக்கம்...?சுழற்சி இயக்கம்
( பம்பரம், மின்விசிறி, குடை ராட்டினம் )

30. ஒரே மாதிரியான இயக்கம் சீரான கால இடைவெளியில் திரும்பத் திரும்ப நடைபெறுவது....?  சீரலைவு இயக்கம்
( ஊஞ்சல், பூமியின் இயக்கம், நிலவின் இயக்கம்)

31. வெவ்வேறு திசைகளில்,வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம்....? தன்னிச்சையான இயக்கம்
( மீனின் இயக்கம், கால் பந்தாட்டத்தில் உள்ள பந்தின் இயக்கம்)

32. ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்...

33. ரோபோவை உருவாக்கியவர்...?
ஐசக் அசிமோ

34. ரோபோவின் இயக்கங்களை கட்டுப்படுத்துவது....? மின்னணுச் சில்லு ( Electronic Chip )

No comments:

Post a Comment