🌐💲➡ புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம்
புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப் படுத்தும் வகையில் அந்த புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது
மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் மங்கள்யான் செயற்கைக்கோளினை எதிர்கால தலைமுறையினர் நினைவில் கொள்ளும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புத்தம் புது 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு வெளியிட்ட 2 ரூபாய் நோட்டில் செயற்கைக் கோள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் நாட்டின் தேசிய விலங்கான புலி இடம் பெற்றிருந்தது. 5 ருபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்ட உடன் பசுமை புரட்சியைக் குறிப்பிடும் வகையில் டிராக்டரில் விவசாயி உழுவது போன்ற படம் இடம் பெற்றிருக்கும்.
50 ரூபாய் நோட்டுக்களில் நாடாளுமன்றம் அச்சிடப்பட்டது. 100 ரூபாய் நோட்டுக்களில் இமயமலைப் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இப்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை படம் இடம் பெற்றுள்ளது.
புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப் படுத்தும் வகையில் அந்த புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment