30 Nov 2016

பொதுத்தமிழ் வினா விடைகள்

1. தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 1452

2. விஜயரங்க சொக்கநாதர் எப்பகுதியை ஆண்ட மன்னர் - திருச்சி

3. வீரசோழியம் யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டது - வீரராசேந்திர சோழன்

4. புறநானூற்றின் பா எது - அகவற்பா

5. அறுகுளம் என்பதன் பொருள் - நீர் வற்றிய குளம்

6. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற ---------------- வகுப்பது பரணி - மாணவனுக்கு

7. கலிங்கத்தின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்கச் சோழன் யாரை அனுப்பினார் - கருணாகரத் தொண்டைமான்

8. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் - சங்க இலக்கியம்

9. புல்லடிமை இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை

10. கவியரசு என்று அழைக்கப்படுபவர் யார் - கண்ணதாசன்

11. கம்பர் வாழ்ந்த காலம் எது - கி.பி. 12 நூற்றாண்டு

12. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார் - நாமக்கல் கவிஞர்

13. இஈ ஐவழி யவ்வும் - எனக் கூறும் நூல் எது - நன்னூல்

14. அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இது யார் கூற்று - கம்பர்

15. கம்பர் காலத்தில் வாழாத புலவர் யார் - திருமூலர்

GK SCIENCE 02/11/16 07

# பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.

# ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ) நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் – நீக்கல் திடீர் மாற்றம்:

# ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது – சேர்த்தல் திடீர் மாற்றம்:

# ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது – பதிலீடு திடீர் மாற்றம்:

# DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:

# C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.

# இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்

# இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.

# இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி

# மூட்டுகளின் இரு வகைகள் அசையும் மூட்டு, அசையா மூட்டு

# மூட்டுகளின் இணைப்பு வகைகள் 1. நாரிணைப்பு மூட்டுகள் 2. குருத்தெலும்பு மூட்டுகள், 3. திரவ மூட்டுகள்(சினோவியல் மூட்டுகள்)

# பந்து கிண்ண மூட்டு எ.கா: தோள் பட்டை, இடுப்பு எலும்புகள்

# டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது – வரம்புடைய குழிகள்.

# ஒற்றைத் துளைத்தட்டு – மாஞ்சிபெரா

# பல துளைத் தட்டு – லிரியோடென்ட்ர்ரான்.

# ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – சைலக்குழாய்க்கள்

# சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் – நீட்டம்

# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.

# சைலத்தில் உள்ள உயிருள்ள திசு – சைலம் பாரன்கைமா

# புரோட்டோ ஃபுளோயம் – சிறிது காலமே உயிர் வாழும்

# துணை செல்கள் – டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.

# ஃபுளோயம் பாரன்கைமா – டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)

# ஃபுளோயம் நார்கள் – பாஸ்ட் நார்கள்

# திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் – சாக்ஸ்

# புறத்தோலில் உள்ள புறவளரிகள் – டிரைக்கோம்க்கள ;

# புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள் – டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.

# காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை – துணை செல்க்கள் (கரும்பு)

# கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை – தண்டு, இலை

# இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை – குக்கர்பிட்டேசி

# கார்க் கேம்பியத்தினை – ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.

# மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் – பாரன்கைமா

# நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது – வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.

# கோலன்கைமா – பலகோண வடிவம்

# செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.

# கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் – ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.

# அடுக்கு கோலன்கைமா – டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.

# இடைவெளிக்கோலன்கைமா – ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்

# பிரேக்கி ஸ்கிளிரைடு – கல்செல்க்கள் (பேரியின் கனி)

# மேக்ரோ ஸ்கிளிரைடு – கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)

# பட்டாணியின் விதை உறை – ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)

# Fibres நார்கள் – தாங்கு திசு

# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.

# சைலோஸ் என்ற சொல்லின் பொருள் – கட்டை

# முதலாம் நிலை சைலம் – புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்

# இரண்டாம் நிலை சைலம் – வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.

# டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – டிரக்கீடுகள்
GK SCIENCE 02/11/16  08

# கார்க் கேம்பியத்தினை – ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.

# மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் – பாரன்கைமா

# நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது – வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.

# கோலன்கைமா – பலகோண வடிவம்

# செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.

# கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் – ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.

# அடுக்கு கோலன்கைமா – டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.

# இடைவெளிக்கோலன்கைமா – ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்

# பிரேக்கி ஸ்கிளிரைடு – கல்செல்க்கள் (பேரியின் கனி)

# மேக்ரோ ஸ்கிளிரைடு – கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)

# பட்டாணியின் விதை உறை – ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)

# Fibres நார்கள் – தாங்கு திசு

# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.

# சைலோஸ் என்ற சொல்லின் பொருள் – கட்டை

# முதலாம் நிலை சைலம் – புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்

# இரண்டாம் நிலை சைலம் – வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.

# டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – டிரக்கீடுகள்.

# ஃபுளோயம் சூழ் சைலம் – பாலிபோடியம்

# சைலம் சூழ் ஃபுளோயம் – அக்கோரஸ்

# வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.

# பக்க வேர்கள் – அகத்தோன்ற்றிகள் – பெரிசைக்க்கிளில் இருந்து

# இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது – பெரிடெர்ம்.

# மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.

# உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)

# நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.

# உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.

# இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்

# இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்

# பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.

# தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.

# நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை – தெளிப்பு நீர் பாசனம்
1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை

1920 – ஒத்துழையாமை இயக்கம்

1920 – 1930

1920 – கிலாபத் இயக்கம்

1922 – சௌரி சௌரா இயக்கம்

1930 – தண்டி யாத்திரை

1927 – சைமன் குழு வருகை

1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்

1930 – 1940

1930 – முதல் வட்டமேசை மாநாடு

1931 – இரண்டாம் வட்டமேசை மாநாடு

1932 – மூன்றாம் வட்டமேசை மாநாடு

1935 – இந்திய அரசு சட்டம்

1939 – இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்

1940 – ஆகஸ்டு நன்கொடை

1940 – 1950

1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1945 – இரண்டாம் உலகப்போர் முடிவு

1946 – இடைக்கால அரசு அமைப்பு

1947 – இந்தியா சுதந்திரம் அடைதல்

1950 – இந்தியா குடியரசு ஆகுதல்
# தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி

# வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி

# குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் – கிரிடினிஸம்.

# நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்

# இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்

# இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்

# விந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.

# தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்

# இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.

# 80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை

# ஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்

# சாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.

# ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்

# மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.

# நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.

# எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.
1900 – 1920

1905 – வங்காளப் பிரிவினை

1906 – முஸ்லீம் லீக் தோற்றம்

1914 – முதல் உலகப்போரின் துவக்கம்

1918 – முதல் உலகப்போரின் முடிவு
# இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?
சுவாமி விவேகானந்தர்

# உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்

# உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?
சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

# தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

# இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்
1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது

# மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?
தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.

# பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது – கி.பி.1908.

# ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் – பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்

# அவருக்கு நேர்ந்தது – செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

# ஆஸ்திரேலியா என்ன செய்தது – ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது

# முதல் உலகப் போரின் காலம் – கி.பி.1914 – கி.பி 1918

# மைய நாடுகள் – ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்

# நேச நாடுகள் – இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்
# மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் – ஜான்சிராணி இலட்சமிபாய்

# ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் – குவாலியர்

# இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்

# தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது – கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

# பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் – இராஜராம் மோகனராய்

# இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் – அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு

# இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் – ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி

# பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை – ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை

# ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது – பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.

# பிரம்மஞான சபையை நிறுவியவர் – மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.

# பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது

# 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் – திருமதி. அன்னிபெசன்ட்

# பிரம்மஞானசபையின் தலைமையகம் – சென்னையில் உள்ள அடையார்
இராமகிருஷ்ண மடம்

# இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?
கோவில் அர்ச்சகர்
6ம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்

3. ஆற்றலின் வகைகள்

1. வேலை செய்யத் தேவையான திறமை....?
ஆற்றல்.

2. ஆற்றலின் அலகு....?
ஜுல்.

3. ஒரு பொருள் நிலையாக இருக்கும்போதோ அல்லது இயக்கத்தில் இருக்கும்போதோ பெற்றிருக்கும் ஆற்றல்...?
இயந்திர ஆற்றல்.

4. இயந்திர ஆற்றல் எத்தனை வகைப்படும்...?
2 ( நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் ).

5. ஒரு பொருள் அதன் நிலையை பொருத்தோ அல்லது வடிவத்தைப் பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல்....?
நிலை ஆற்றல்.
Ex: அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர்.

6. இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல்....?
இயக்க ஆற்றல்.
Ex: அணையிலிருந்து கீழே விழும் நீர்.

7. வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல்...?
வேதி ஆற்றல்.

8. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்....?
ஜேம்ஸ் ஜுல்.

9. மின் விளக்கில்  மின்னாற்றல் ஒளியாற்றலாக மாற்றமடைகிறது....

10. மின் விசிறியில் மின்னாற்றல் இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது....

11. காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது....

12. வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் முதன்மைப் பொருள்....?
சூரியன்.

13. சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றல்....? சூரிய ஆற்றல்.

14. செயற்கைக் கோள்களிலும் கணக்கீட்டு கருவிகளிலும் பயன்படுவது....?
சூரிய மின்கலங்கள்.

15. ஒலிபெருக்கியில்  மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது....

16. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக சேமித்து வைக்கின்றன....

17. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்....

18. எந்த ஒரு ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு மாறாமல் இருக்கும்...

19. துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல்....?
சூரியனின் வெப்ப ஆற்றல்.

20. நிலக்கரியை எரிக்கும்போது அதன் வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது....

பொது அறிவு - 9 ஆம் வகுப்பு : மூன்றாம் பருவம் - அறிவியல்

1. நேர்மின் அயனி அதன் மூல அணுவை விட அளவில் --------------- உள்ளது - சிறியதாக

2. 1 காலன் என்பது ------------- லிட்டருக்கு சமம் - 4.5

3. புகையில் அதிக அளவு இருப்பது? - கார்பன் மோனாக்ஸைடு

4. முதலையின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது - 4

5. ஸ்கிளீரன்கைமா திசு ------------------ திசு ஆகும் - உயிரற்ற

6. புளோயம் பாரன்கைமா ஸ்டார்ச்சையும் ---------------- சேமிக்கின்றன - கொழுப்பும்

7. தாவரங்களின் எல்லா வாழ்வியல் செயல்களுக்கும் ------------ மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் - நீர்

8. நீரும், கனிம உப்புக்களும் கடத்தப்படும் நிகழ்ச்சிக்கு ----------------------- என்று பெயர் - சாறேற்றம்

9. மூலக்கூறுகள் வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நகரும் நிகழ்வு ----------------- எனப்படும் - உயிர்ப்புக் கடத்துதல்

10. செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா என்பது --------------- - பூஞ்சை

11. வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றார்ப்போல் தாவர உறுப்பு வளைதல் ---------------- எனப்படும். - வேதிச் சார்பசைவு

12. மகரந்தக்குழல் சூல் பகுதியை நோக்கி வளர்தல் ----------------- க்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும் - வேதிச் சார்பசைவு

13. ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி ------------------ எனப்படும் - ஒளியுறு வளைதல்

14. தூண்டலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் -------------- எனப்படும். - தொங்கும் அசைவு

15. எந்த ஆண்டு மினாமிட்டா நோய் என்னும் ஒரு வித நோய் கண்டுபிடிக்கப்பட்டது? - 1952

பொது அறிவு

1. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது? மிண்டோ-மார்லி சீர்திருத்தம்

2. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? ரிப்பன் பிரபு

3. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்ட இந்தியத் தலைவர்கள் யார்? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ்

4. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது? கிலாபத் இயக்கம்

5. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு

6. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது? 1930

7. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்? லிண்லித்தோ பிரபு

8. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்? லட்சுமி

9. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது? 1919 - 1947

10. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1938

11. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்? 52 வினாடிகள்

12. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்

13. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழங்கியவர் யார்? அன்னிபெசண்ட்

14. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்? கர்சன் பிரபு

15. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார்? பாலகங்காதர திலகர்

16. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி

17. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்? லாலா லஜபதி ராய்

18. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்? கான் அப்துல் கபார்கான்

19. “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி

20. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார்? சுவாமி விவேகானந்தர்

21. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது? அக்டோபர் 2

22. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? வினோபா பாவே

23. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜனவரி 30

24. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்? ராபர்ட் கிளைவ்

25. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி

26. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? அன்னிபெசண்ட் அம்மையார் .
பொது அறிவு - 8 ஆம் வகுப்பு : மூன்றாம் பருவம் - சமூக அறிவியல்

1. வில்லியம் பெண்டிங் பிரபுவிற்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது எது? - சமூகச் சீர்திருத்தங்கள்

2. பம்பாய், தானாவிற்கு இடையே இருப்புப் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு? - 1853

3. டல்ஹெளசி பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆண்டு? - 1848

4. இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர் யார்? - கானிங் பிரபு

5. மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடக்கமாகக் கருதப்படுவது எந்த ஆண்டு? - 1529

6. உய்யக் கொண்டான் கால்வாய் யாருடைய சிறப்பைக் கூறுகிறது? - இராணி மங்கம்மாள்

7. கி.பி.1763 ஆம் ஆண்டு துல்ஜாஜி என்பவர் -------------------- ன் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார் - தஞ்சை

8. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஆண்டு? - கி.பி.1761

9. தலைப்பாகையை அணிய மறுத்த சிப்பாய்களுக்கு சாட்டையடி தண்டனை விதிக்கப்பட்டது எந்த புரட்சிக்கான காரணம் ஆகும்? - வேலு}ர் புரட்சி

10. கொழுப்பு தடவிய தோட்டாவைத் தொட மறுத்த முதல் வீரர் யார்? - மங்கள் பாண்டே

11. கிராண்ட் டிரங்க் சாலையின் நீளம் என்ன? - 2500 கி.மீ

12. தென் மற்றும் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை அக்கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளோடு இணைக்கும் வழி எது? - பனாமா கால்வாய் வழி

13. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ? - 1844

14. 1804 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை ----------- எட்டியது - ஒரு மில்லியன்

15. உலகில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு? - மங்கோலியா

29 Nov 2016

# வள்ளலார் – இராமலிங்க அடிகள்

# கெய்சர் இரண்டாம் வில்லியம் – ஜெர்மனி

# கெஸ்டபோ – ஹிட்லரின் இரகசிய காவல்படை

# டிரையனான் உடன்படிக்கை – ஹங்கேரி

# கருஞ்சட்டை – முசோலினியின் தொண்டர்கள்

# ‘U’ வடிவ படகுகள் – ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்

# மங்கள் பாண்டே – பாரக்பூர்

# வகுப்பு வாத அறிக்கை – ராம்சே மெக்டொனால்டு

# நியூ இந்தியா – அன்னிபெசண்ட்

# மவுண்ட் பேட்டன் பிரபு – சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

# மெயின் காம்ப் – எனது போராட்டம்

# அரசை உருவாக்குபவர் — காமராஜர்

# நவீன இந்தியாவின் விடிவெள்ளி – இராஜாராம் மோகன்ராய்

# சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் – இராமகிருஷ்ணமடம்

# சர்தார் வல்லபாய் பட்டேல் – இந்தியாவின் பிஸ்மார்க்

# ஒன்றிணைப்பு உடன்படிக்கை – 1967

# அழித்துப் பின்வாங்கும் கொள்கை – ரஷ்யா

# ரோம் அணிவகுப்பு – 1922
# போரில் உபயோகபடுத்தப்பட்ட போர் கருவிகள் – பிரங்கிப்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்

# சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள் – 1. சர்வதேச சமுதாயம், 2. உலக அமைதி கூட்டமைப்பு, 3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்

# சர்வேத சங்கத்தின் தலைமையகம் – ஜெனிவா

# உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கான – சர்வதேச சங்கத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்

# ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது – 1931

# உட்ரோவில்சன் – அமெரிக்கா

# செவ்ரேஸ் உடன்படிக்கை – துருக்கி

# ஃபரர் – தலைவர்

# விக்டோரியா பேரறிக்கை – மகாசாசனம்

# பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதிராய்

# பிஆர். அம்பேத்கர் – வரைவுகுழு

# இந்தியாவின் இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்

# சாணக்கியர் – இராஜாஜி

# வைக்கம் வீரர் – ஈ.வெ.ரா

# எல்லை காந்தி – கான் அப்துல் காபர்கான்

# சௌரி சௌரா – உத்திரபிரதேசம்

# நீதிக்கட்சி – டி.எம்.நாயர்
# இராணி இலட்சுமிபாய் – ஜான்சி

# சீனக் குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்

# உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் – கெய்சர் இரண்டாம் வில்லியம்

# ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிட்டானியா

# பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா

# பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் – முசோலினி

# ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது – பெயிண்டர்

# இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை

# முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்

# இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்

# பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்

# ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945

# பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.

# ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ

# 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்

# குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி

# பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856

# முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
# தேவதாசிமுறை – டாக்டர் முத்துலட்சமி ரெட்டி

# ஈஸ்வர சங்கர வித்யாசாகர் – சமய, சமூக சீர்திருத்தவாதி

# அட்லாண்டிக் சாசனம் – எப்.டி.ரூஸ்வெல்ட்

# புனரமைப்பு நிதி நிறுவனம் – கடனுதவிகள்

# கூட்டாச்சி ரிசர்வ் வங்கி – வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்

# ஹாங்காங் தீவு – இங்கிலாந்து

# நானா சாகிப் – கான்பூர்

# மோதிலால் நேரு – சுயராஜ்ஜியக் கட்சி

# சுப்பிரமணிய பாரதி – நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்

# பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் – பங்குச் சந்தை உரிமம்

# ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு – ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்

# காக்கிச் சட்டைகள் – ஹிட்லரின் தொண்டர்கள்

# சுதேசி – ஒருவருடைய சொந்த நாடு

# பாண்டிச்சேரி – பிரஞ்சுப் பகுதிகள்

# சத்தியமூர்த்தி – பூண்டி நீர் தேக்கநிலை

# கோவா – போர்ச்சுக்கீசிய பகுதிகள்

# இராயல் விமானப்படை – இங்கிலாந்து

# பன்னாட்டு குடியேற்றம் – சீனா
# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா

# கிளமண்சு – பிரான்சு

# ஜெர்மன் உடன்படிக்கை – ஆஸ்திரியா

# ஒவரா – இரகசிய காவல்படை

# ஸ்வதிகா – நாசி சின்னம்

# அணு சோதனை தடைச்சட்டம் – 1963.

# ஆர்லாண்டோ – இத்தாலி

# வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி

# டியூஸ் – முசோலினி

# லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி

# பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ

# லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்

# நியூலி உடன்படிக்கை – பல்கேரியா

# பெரும்புரட்சி – 1857

# இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி

# கேசரி – பாலகங்காதர திலகர்

# பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி

# ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) – ஒரிசா
# சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்

# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்

# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்

# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்

# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி

# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்

# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்

# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்

# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்

# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்

# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்

# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ

# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா

# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950

# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்

# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்

# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
இராசராச சோழனின் வில், வாள், முரசு, கொடி, குடை குறித்து கூறப்படுபவை:
வில் - இந்திரனை வென்றது, பெருங்கடலை வற்றச் செய்தது.
வாள் - சோழ நாட்டிற்குக் காவிரி செல்ல மலையை வெட்டி வழி
அமைத்தது. வானத்தில் அசைந்த நகரத்தை அழித்தது.

முரசு - சேரனை வென்று பெற்ற கடப்பமரத்தால் செய்யப்பட்டது. காவிரிக்கு அணைகட்ட பகைவரை மண் சுமக்கச் செய்தது.
கொடி - மேருமலையை வலம் வந்தது. இந்திரனைப் புலியாகக் கொண்டது.
குடை - மக்களைக் காப்பதற்கு அண்ட கூடத்தை ஒத்து நின்றது.

வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:

பிழை: வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா
பிழை: அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள
பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்
பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை
பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா
பிழை: ஒன்றோ அல்லது இரண்டோ தருக
திருத்தம்: ஒன்றோ இரண்டோ தருக
பிழை: சென்னை என்ற நகரம்
திருத்தம்: சென்னை என்னும் நகரம்
பிழை: எனது மகன்
திருத்தம்: என் மகன்
பிழை: ஏற்கத் தக்கது அல்ல
திருத்தம்: ஏற்கத் தக்கது அன்று
பிழை: அவளது தந்தை
திருத்தம்: அவள் தந்தை
பிழை: புலி வந்தன
திருத்தம்: புலி வந்தது
பிழை: எருதுகள் ஓடியது
திருத்தம்: எருதுகள் ஓடின
பிழை: பூக்கள் மலர்ந்து மணம் வீசியது
திருத்தம்: பூக்கள் மலர்ந்து மணம் வீசின
பிழை: இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
திருத்தம்: இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
பிழை: எனக்குப் பல வீடுகள்உள
திருத்தம்: எனக்கு வீடுகள் பல உள்ளன
பிழை: இது பொது வழி அல்ல
திருத்தம்: இது பொது வழி அன்று
பிழை: விழாவில் பல அறிஞர் பேசினர்
திருத்தம்: விழாவில் அறிஞர்கள் பலர் பேசினர்
பிழை: தென்றல் மெல்ல வீசின
திருத்தம்: தென்றல் மெல்ல வீசியது
பிழை: வாகனத்தை இடது பக்கம் திருப்பாதே
திருத்தம்: வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே
பிழை: பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
திருத்தம்: பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது
பிழை: வலது பக்கச் சுவரில் எழுதாதே
திருத்தம்: வலப்பக்கச் சுவரில் எழுதாதே
பிழை: ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
திருத்தம்: ஒவ்வொரு சிற்றூரிலும் ஊராட்சி உள்ளது.
பிழை: மாணவர்கள் கல்வியறிவு ஒழுக்கத்திற் சிறந்து விளங்க வேண்டும்.
திருத்தம்: மாணவர்கள் கல்வியறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிழை: அவர் தான் கூறினார் இவர் தான் கூறினார் என்று பாராது எவர் தான் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க
திருத்தம்: அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.
பிழை: நல்லவகைளும் கெட்டவைகளும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
திருத்தம்: நல்லனவும், கெட்டனவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
பிழை: கண்ணன் முருகன் மற்றும்வேலன் வந்தனர்.
திருத்தம்: கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.
பிழை: சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
திருத்தம்: சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமரி அன்று.
பிழை: தலைவி தலைவனோடு சென்றார்
திருத்தம்: தலைவி தலைவனோடு சென்றாள்
பிழை: இதனைச் செய்தவர் இவரல்லவா?
திருத்தம்: இதனைச் செய்தவர் இவரல்லரோ?
பிழை: பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
திருத்தம்: பெரியனவும், சிறியனவுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
மரபு வழூஉச்சொற்களை நீக்கி எழுதுதல்

* காகம் கூவும், நாய் கத்தும்
- காகம் கரையும், நாய் குரைக்கும்
* காட்ல யானை கத்தியது, புலி கூவியது
- காட்டில் யானை பிளிறியது, புலி உறுமியது
* நீரின்றி நஞ்சையும், புஞ்சையும் விளையவில்லை
- நீரின்றி நன்செய்யும், புன்செய்யும் விளையவில்லை
* யானை மேய்ப்பனோடு ஆட்டுப் பாகனும் வந்தான்
- யானைப் பாகனோடு ஆட்டு இடையனும் வந்தான்
* கரும்புத் தோப்புக்கு அருகாமையில் நாய் கத்தியது
- கரும்புக் கொல்லைக்கு அருகில் நாய் குரைத்தது.
* மயில் கூவ, குயில் அகவ, கிளி பாடியது
- மயில் அகவ, குயில கூவ, கிளி பேசியது
* தேயிலைத்தோப்புக்கு அருகில் பலாத் தோட்டம் உள்ளது.
- தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் பலாத் தோப்பு உள்ளது.
* சோளக்காடு - ஆலங்கொல்லை
- சோளக் கொல்லை - ஆலங்காடு
* குதிரைத் தொழுவம் - யானை கொட்டில்
- குதிரைக்கொட்டில் - யானைக் கூடம்
* தோட்டத்தில் வாழைச்செடியும் மாஞ்செடியும் நட்டனர்.
- தோட்டத்தில் வாழைக் கன்றும், மாங்கன்றும் நட்டனர்.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுதல்

* அப்பிசி மாசம் அடமள இம்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
* கோளி முட்டை தாவாரத்தில் உருண்டது.
- கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது
* வெடியங்காட்டியும் வெத்திலை போடறது ஒரு பளக்கமா?
- விடிவதற்குள் வெற்றிலை போடுவது ஒரு பழக்கமா?
* ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
- ஒருவன் ஒன்றியாய்ப் போனால் அது ஊர்வலம் ஆகுமா?
ஐந்தாண்டு திட்டங்களும் அதன் முக்கிய நோக்கமும்

1. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1951 - 1956

முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்

நோக்கம் : முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.

2. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் - 1956 - 1961

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.

நோக்கம் : முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.

3. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1961 - 1966

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.

நோக்கம் : தற்சார்பு திட்டம்

4. நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1969 - 1974

நோக்கம் : நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை

5. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1974 - 1979

நோக்கம் : வறுமையை ஒழித்தல்

6. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1980 - 1985

நோக்கம் : வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்

7. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1985 - 1989

நோக்கம் : உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன், தற்சார்பு ஆகியவை பெருகுதல்

8. எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1992 - 1997

நோக்கம் : முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி

9. ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 1997 - 2002

நோக்கம் : வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி

10. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2002 - 2007

நோக்கம் : நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி

11. பதினோறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2007 - 2012

12. பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் - 2012 - 2017
புயல்

01) சாரிகா புயல் தாக்கிய இடம்?  ===  பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா

02) எய்ட் புயல் தாக்கிய இடம்?   ==== வட கரோலினா

03) ஹெர்மைன் புயல் தாக்கிய இடம்?   ==== கியூபா

04) ஜூலியா புயல் தாக்கிய இடம்?   ==== தென் கிழக்கு அமெரிக்கா

05) கார்ல் புயல் தாக்கிய இடம்?   ==== கேப் வேர்டே, பெர்முடா

06) மேத்யூ புயல் தாக்கிய இடம்?   ==== ஹைதி

07) நிக்கோல் புயல் தாக்கிய இடம்?   ==== பெர்முடா

08) காம்பசு புயல் தாக்கிய இடம்?  ==== ஜப்பான், ரஷ்யா

09) நாம்தென்யுன் புயல் தாக்கிய இடம்?   === ஜப்பான்

10) மாலெள புயல் தாக்கிய இடம்?  ==== ஜப்பான்

11) மெரண்டி புயல் தாக்கிய இடம்?   ==== பிலிப்பைன்ஸ், தைவான் சீனா, மரியானா தீவு

12) ராய் புயல் தாக்கிய இடம்?   ==== வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து

13) மலாக்காஸ் புயல் (ஜுனா புயல் ) தாக்கிய இடம்?  === ஜப்பான், தைவான் மற்றும் மரியானா தீவுகள்

14) மேகி புயல் ( ஹெலன் புயல் ) தாக்கிய இடம்?   ==== சீனா, தைவான், கரோலின்

15) சாங்டா புயல் தாக்கிய இடம்?   ==== தென்கொரியா

16) ஏயியாரி(ஜுலியன்) புயல் தாக்கிய இடம்?  ==== பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம்

17) ஹைமா புயல்(லாவின் புயல்) தாக்கிய இடம்? === பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனா

18) சாரிகா புயல் தாக்கிய இடம்?  ===  பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா
எது பிழை? எது சரி ?

1. கிருட்டிணன் - கிருட்டினன்
கிருஷ்ணன் என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் கிருட்டினன் என்று எழுதுவதே மரபு. கர்ணன் என்பது தமிழில் கன்னன் என்றே வரும். க்ருஷ்ணவேணி என்பது கிருட்ணவேணி என்று எழுதப்படும்.

2. சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே
சுவர் + இல் = சுவரில் - சுவரில் எழுதாதே என்பதே சரியான தொடர். சுவற்றில் என்று எழுதினால் வரண்டு போன இடத்தில் என்பது பொருளாகும்.

3. ஒரு ஆடு - ஓர் ஆடு
ஒன்று என்பது ஒரு எனத் திரிந்துள்ளது. ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்று எழுதுவதே வழாநிலையாம்.

4. ஓர் அரசன் - அரசன் ஒருவன்
ஒரு என்ற சொல் உயிரெழுத்துகளுக்கு முன்னும், யகர ஆகாரத்தின் முன்னும் ஓர் என்று ஆகும் என மேலே கண்டோம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது தவறு. அரசன் ஒருவன் என்று எழுதுவதே சரியாகும். இதுபோலவே அரசர் பலர் என்று வரும்.
5. கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது
கடை அருகில் இருக்கிறது என்பதே சரி.

6. பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்
முயற்சித்தல் என்ற வினைச் சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுவதே சரியாகும்.

7. அலமேல் மங்கை - அலர் மேல் மங்கை
அலர் மேல் மங்கை என்பதே சரியாகும். அலர் என்றால் பூ. பூவின்மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை.

8. நாட்கள் - நாள்கள்
கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள் ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள் என்றே எழுதுக.

9. எந்தன் - என்றன்
என்றன் என்பதே சரி. என் தன் என்றன் என்றே வரும் ( என்- ஒருமை, தன்- ஒருமை) (எம் - பன்மை, தம் - பன்மை) எம் தம் எந்தம் என்றே வரும் ( எம் - பன்மை, தன் - ஒருமை - எந்தன்) இது தவறான புணர்ச்சியாகும்.

10. சாற்றுக்கவி - சாற்றுகவி
சாற்றுக்கவி என்று "க்" மிகுந்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால், சாற்றுக்கவி என்பது வினைத்தொகையாகும். வினைத் தொகையின் முன் வல்லினம் மிகா.

11. வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்
வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது. அதுபோலப் புல், நீர், தாகம் ஆகியவற்றுக்கும் பன்மை கிடையாது. ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும். ஆடு புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறு. பல ஆறுகளின் நீர்க் குடித்தேன் என்பதே சரி. நண்பர்களின் தாகங்களை நீக்கினேன் என்பது தவறாகும். நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

12. மனதை - மனத்தை
மனம் ஐ மனத்தை என்றே வரும். பணம் ஐ பணத்தை என்றே வரும். பணதை என்று வருமா? தனம், வனம், சினம், கனம், இனம், பிணம் ஆகிய சொற்களுடன் ஐ சேரத் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும்.
13. திருநிறைச் செல்வன் - திருநிறை செல்வன்
திருநிறைச் செல்வன் என்று வல்லினம் மிகுந்து வருதல் தவறாகும். திருநிறை செல்வன் என்பது வினைத்தொகை. வினைத் தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறை செல்வன், திருவளர் செல்வி, திருவளர் செல்வன் என்று வல்லினம் மிகாமல் எழுதுக.

14. புள்ளாங்குழல் - புல்லாங்குழல்
புள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் என்று பொருள். எனவே மூங்கில் குழாயிலிருந்து உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை)

15. கலை கழகம் - கலைக்கழகம்
கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருள்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுந்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருள்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.
16. பெறும் புலவர் - பெரும் புலவர்
பெறும் புலவர் என்றால் பரிசைப் பெருகின்ற புலவர் எனப் பொருள்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள்ள பெரிய புலவர் எனப் பெருளாகும். எனவே செயலறிந்து எழுதுக.

17. தந்த பலகை - தந்தப் பலகை
தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருள்படும். தந்தப்பலகை என்று வல்லினம் மிகுந்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருள்படும். எனவே இடமறிந்து எழுதுக.

18. செடி கொடி - செடிக்கொடி
செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருள்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுந்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருள்வரும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.

19. நடுக்கல் - நடுகல்
திருக்குறள், முழுப்பழக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிற சொற்களைப் போல நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம், ஆனால் நடுகல் என்பது வினைத் தொகையாக இருப்பதால் (நட்டகல், நடும்கல், நடுகின்ற கல்) வினைத்தொகையில் வல்லினம் மிகா.

20. காவேரி - காவிரி
காவிரி என்ற சொல்லிலிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது, வளர்ப்பது என்னும் பொருள் உண்டு. (கா - சோலை) காவிரிப்பூம்பட்டினம், காவிரிநாடன் என எழுதுவதே சிறப்பாகும்.

21. வேலைக் கொடு - வேலை கொடு
வேலைக் கொடு என்றால் கூரிய ஆயுதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். வேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலையைக் கொடு என்ற பொருள் தரும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

22. எத்தனை - எவ்வளவு
இச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்ணைக் குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்? எவ்வளவு துணி வாங்கினாய் என எழுதுதல் வேண்டும். எவ்வளவு அழகு என்பதே சரி.

23. ஆம் - ஆவது
ஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சோந்து வருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது என்பது வரிசை முறையைக் குறிக்கும். சான்று : முதலாம் பாகம், இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு, ஆறாவது பதிப்பு.

24. கருப்புக் கொடி - கறுப்புக் கொடி
கறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும். நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். கருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக அகரமுதலிகளிலும் காணப்படுகிறது. கருப்பு என்பதற்குக் கரும்பு என்ற பொருளும் உண்டு (கருப்பஞ்சோலை). கருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும். எனினும் காக்கை கருமை நிறமானது என்றும் நீக்ரோ கறுப்பு இனத்தவர் என்றும் எழுதுவது நன்று.

25. பெண்ணையார் - பெண்ணையாறு
பெண்ணையார், பாலார், அடையார் என்பன பிழைகளாம். பெண்ணையாறு, பாலாறு, அடையாறு என்பனவே சரியாகும்.

26. முப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று
முப்பத்தி மூன்று என்பது பிழை. முப்பத்து மூன்று என்பதே சரி. முன்னூறு என்பது பிழை. முந்நூறு என்பதே சரி. ஐநூறு என்பது பிழை. ஐந்நூறு என்பதே சரி. எட்டு நூறு எனல் வேண்டா. எண்ணூறு என்க. பனிரெண்டு என்பது பிழை. பன்னிரண்டு என்பதே சரி.

27. பெரும் ஓசை - பேரோசை
பெரும் ஓசை என்பது பிழை. பேரோசை என்பதே சரி. முப்பெரும் விழா என்பது பிழை. முப்பெருவிழா என்பதே சரி.

28. 5 ம் நாள் - 5 ஆம் நாள்
5 ஆம் நாள் என்பதே சரி. இதுபோலவே 6 ஆவது ஆண்டு என்பதே சரி (6 வது ஆண்டு அல்ல)

29. சிலவு - செலவு
சிலவு என்று பலரும் எழுதுகின்றனர். (செல்லுதல் - செலவு) எனவே செலவு என்று எழுதுக.

30. சுதந்திரம் - சுதந்தரம்
சுதந்திரம் என்று எழுதாதீர். சுதந்தரம் என்றே எழுதுக. சுந்தரராமன், சுந்தரமூர்த்தி என்றே எழுதுக.

31. பட்டணம் - பட்டினம்
இரண்டும் ஊர்ப்பெயர்ச் சொற்களே. பட்டணம் நகரத்தைக் குறிக்கும். பட்டினம் கடற்கரை சார்ந்த ஊரைக் குறிக்கும்.
இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை தொடர்ச்சி.

பிரெஞ்சுக்காரர்கள்:-

பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான “கால்பர்ட்” என்பவரின் முயற்சியால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கி.பி.1664-ல் தோற்றுவிக்கப்பட்டது.

இவர்கள் கி.பி.1668-ல் சூரத்திலும், கி.பி1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வணிக மையத்தை ஏற்படுத்தினர்.

கி.பி.1674-ல் தஞ்சாவூர் மன்னரிடமிருந்து சென்னைக்கு தெற்கே ஒரு நிலப்பகுதியைப் பெற்று பாண்டிசேரியை நிறுவி, இதனை தலைமையிடமாக மாற்றினர்.

கி.பி. 1742-ல் டியூப்ளே, பிரெஞ்சு கவர்னராக பொறுப்பேற்றார்.

இறுதி ஆதிக்கப்போட்டி:-

இந்தியாவுக்கு ஐரோப்பாவிலிருந்து ஐந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்தாலும், இறுதியில் ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் தான் ஆதிக்கப்போட்டி நிலவியது. இதன் விளைவாக இவர்களுக்குள் போர்கள் ஏற்பட்டன. அப்போர்கள் தான் கர்நாடகப் போர்கள்.

கர்நாடகப் போர்கள்

முதல் கர்நாடகப் போர்: கி.பி. 1746-1748 (அய்லா சாப்பேல் உடன்படிக்கை)

இரண்டாம் கர்நாடகப் போர்: கி.பி. 1748-1754 (பாண்டிச்சேரி உடன்படிக்கை)

மூன்றாம் கர்நாடகப் போர்: கி.பி. 1756-1763 (பாரிஸ் உடன்படிக்கை)

இரண்டாம் கர்நாடகப் போரில், இராபர்ட் கிளைவ் பங்கெடுத்து ஆற்காட்டைக் கைப்பற்றியதால், ஆற்காட்டின் வீரர் என அழைக்கப்பட்டார்.
இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை

இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே வணிகத் தொடர்பு இருந்தது. இந்தியப் பொருட்களான பட்டு, கைத்தறி, நறுமணப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று வழித்தடங்களில் ஏற்றுமதியாயின.

இதில் இரு வழித்தடங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் அராபியர் படையெடுப்பின் விளைவாக தடைபட்டன.

கி.பி.1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றியதால் மூன்றாவது வழித்தடமும் தடைபட்டது.

எனவே, இந்தியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட ஐரோப்பியர்கள், இந்தியாவுக்கு கடல்வழி காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போர்த்துக்கீசியர்கள்:-

கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்த்துக்கீசியர்கள். போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டு மாலுமிகளுக்கு பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கினார். எனவே இவர் “மாலுமி ஹென்றி” எனப் போற்றப்பட்டார்.

கி.பி.1487-ல் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பார்த்தலோமியா டயஸ், முதன் முதலில் கடல்பயணம் செய்தார். ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை அடைந்ததும், புயல் அதிகமாக வீசியதால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை.

இம்முனைக்கு “புயல்முனை” எனப் பெயரிட்டார். இதைக் கடந்தால் புதிய பகுதிகளைக் காணலாம் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எனவே இப்புயல்முனை “நன்னம்பிக்கை முனை” என்றழைக்கப்பட்டது.
கி.பி1498-ல் போர்த்துக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைக் கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தடைந்தார். அவரை மன்னர் சாமரின் வரவேற்று உபசரித்தார்.

போர்த்துக்கீசியர்கள் இதனை தொடர்ந்து கள்ளிக்கோட்டை, கொச்சின், மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வாணிகத்தலங்களை அமைத்தனர்.
போர்த்துக்கீசியர் வாணிகத்தைக் கவனிக்க வந்த முதல் ஆளுநர் பிரான்சிஸ்கோ-டீ-அல்மெய்டா (கி.பி. 1505-1509). இவரது கொள்கை “நீலநீர் கொள்கை” எனப்படும்.

போர்த்துக்கீசிய இரண்டாவது ஆளுநர் அல்போன்ஸோ-டி-அல்புகர்க் இவர் கி.பி.1510-ல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி தலைநகரமாக்கினார்.

இவருக்குப் பின் வந்தவர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் செல்வாக்கைக் கட்டிக்காக்க முடியவில்லை.

டச்சுக்காரர்கள்:-

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டச்சுக்காரர்கள் கி.பி. 1602-ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியை தோற்றுவித்தனர்.

கி.பி.1610-ல் “புலிகட்” என்றழைக்கப்படும் பழவேற்காட்டில் கோட்டை கட்டி அதை தங்கள் தலைமையிடமாக மாற்றினர்.

டச்சுக்காரர்களுக்கு இந்தியாவில் வணிகம் செய்ய ஆர்வமில்லை. நறுமணத்தீவு என்றழைக்கப்பட்ட இந்தோனேசியாவில் வணிகம் செய்தனர். வணிகப்போட்டியில் ஆங்கிலேயரை “அம்பாய்னா” என்ற தீவில் கொன்றனர். இதன் பெயர் 'அம்பாய்னா படுகொலை'.

ஆங்கிலேயர்கள்:-

லண்டன் நகர வியாபாரிகள் நூறுபேர் சேர்ந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை தோற்றுவித்தனர். கி.பி.1600 டிசம்பர் 31-ல் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கான அனுமதி வழங்கினார்.

கி.பி.1608-ல் இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் கொடுத்த வியாபாரம் செய்ய அனுமதி கோரிய கடிதத்துடன் ஆங்கில மாலுமியான வில்லியம் ஹாக்கின்ஸ், ஜஹாங்கீரின்அரசவைக்கு வந்தார். வியாபாரம் செய்திட அனுமதி கிடைக்கவில்லை.

அதன் பின்னர், சர் தாமஸ் ரோ என்ற ஆங்கில வியாபாரி, வியாபாரம்  செய்வதற்கான அனுமதியினைப் பெற்றார்.

ஆங்கிலேயர்கள் சூரத், ஆக்ரா, பரோச், அகமதாபாத் ஆகிய இடங்களில் வாணிப மையத்தை ஏற்படுத்தினர்.
கி.பி.1639 ஆம் ஆண்டு பிரான்சிஸ்டே என்ற ஆங்கில அதிகாரி, சந்திரகிரி அரசரிடமிருந்து  ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி, தற்கால சென்னை நகரை நிறுவினார். இதில் கி.பி.1640-ல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுக்கல் நாட்டு இளவரசி காத்தரின் என்பவரை திருமணம் செய்ததால், சீர்வரிசையாக பம்பாய் கொடுக்கப்பட்டது. இதனை, இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டார்.

கி.பி.1699-ல் முகலாய மன்னர் ஒளரங்கசீப்பின் அனுமதி பெற்று கல்கத்தாவில் வணிக மையம் நிறுவப்பட்டது.

இவ்வாறாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் தங்களது வணிக மையங்களை ஏற்படுத்தினர்.

டேனியர்கள்:-

டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் டேனியர்கள்.

டேனியர்கள், கி.பி.1620-ல் தரங்கம்பாடியிலும்,  கி.பி.1676-ல் வங்காளத்திலுள்ள சீராம்பூரிலும் வணிக மையங்களை நிறுவினர்.

பின்னர், இவற்றை ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.
1. பால் கெடுவதற்கு காரணமான பாக்டீரியா எது?
a) எண்ட்ரோபாக்டர்✅
b )அசிட்டோபாக்டர்
c) ஸ்டெப்டோகாக்கஸ்
d) லாக்டோபேசில்லஸ்
2. கணு இடை வேகமாக நீண்டு வளரத் தூண்டும் ஹார்மோன்
a) ஆக்ஸின்
b) சைட்டோகைனின்
c) ஜிப்ரலின்✅
d) எத்தலீன்
3. அனோபிலஸ் பெண் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்
a) டைபாய்டு
b) மஞ்சள் காமாலை
c) காமாலை
d) மலேரியா✅
4. தரைகீழ் விதை முளைத்தலைக் கொண்ட தாவரம்?
a) நெல்✅
b) அவரை
c) ஆமணக்கு
d) புளி
5. ஒலியை அளவிடும் அலகு
a) ஆம்பியர்
b) டெசிபல்✅
c) ஒளிஆண்டு
d) பாஸ்கல்
6. உலக வன உயிரி அமைப்பின் தலைமையிடம்
a) சுவிட்சர்லாந்து✅
b) இந்தியா
c) ரஷ்யா
d) சீனா
7. பசுமைப்புரட்சியின் தந்தை
a) எல்.எஸ். சுவாமிநாதன்✅
b) காய்டு
c) நார்மன் போர்லாக்
d) ராமன்
8. எலும்புத் தசையின் செயல் அலகு
a) நியூரான்
b) நெப்ரான்
c) சார்கோமியர்✅
d) செல்
9. காட்டுக் கழுதைகள் காணப்படும் பகுதி
a) கிர் காடுகள்
b) கட்சு பகுதி✅
c) சுந்தரவனம்
d) நிலகிரி மலை
10. ஒரு பூவின் மகரந்தத் தூள் வேறொரு பூவின் சூள் முடியை அடைவது
a) ஆட்டோகாமி
b) டைத்மகாகாமி
c) அல்லோகாமி✅
d) ஹெர்கோகாமி
11. எக்ஸ் கதிகள் இதன் வழியே செல்லாது
a) கண்ணாடி
b) தங்கம்✅
c) கால்சியம்
d) கார்பன்
12. இந்து சமயத்தின் மார்டின்லூதர் யார்?
a) இராஜா ராம்மோகன் ராய்
b) கேசவ சந்திர சென்
c) அன்னிபெசன்ட்
d) தயானந்த சரஸ்வதி✅
13. இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர்
a) சி.ஆர்..தாஸ்
b) நேதாஜி✅
c) காந்திஜி
d) இராஜாஜி
14. நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை
a) தனியார் மயம்
b) தாராளமையம்
c) கலப்புப் பொருளாதாரம்✅
d) உலகமயம்
15. இராஜ்ய சபாவின் உறுப்பினர் எண்ணிக்கை
a) 235
b) 248
c) 212
d) 250✅
16. உறிஞ்சிய நீரை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் மண் வகை?
a) கரிசல் மண்✅
b) வண்டல் மண்
c) மணல்
d) செம்மண்
17. ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரம்
a) ஆனைமுடி
b) தொட்டபெட்டா
c) அபுமலை✅
d) எவரெஸ்ட்
18. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணை
a) ஸ்டான்லி நீர்தேக்கம்✅
b) சேதுக் கால்வாய் அணை
c) பக்ராநங்கல்
d) ஹிராகுட்
19. கார்கில் போர் நடைபெற்ற ஆண்டு
a) 1938
b) 1997
c) 1998
d) 1999✅
20. மத்தியப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை
a) 67
b) 97✅
c) 47
d) 57
21. மகாபாரதத்தை எழுதியவர் யார்?
a) வால்மீகி
b) கிருஷ்ணர்
c) வேதவியாசர்✅
d) கம்பர்
22. நன்னூலை எழுதியவர்
a) திருத்தக்க தேவர்
b) பரஞ்சோதி முனிவர்✅
c) ஹேமசந்திரர்
d) திருவள்ளுவர்
23. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
a) மெகஸ்தனிசு
b) சாணக்கியர்✅
c) விசாகதத்தர்
d) செலுகஸ் நிகேடர்
24. நெடுஞ்செழியன் ஆட்சியை விவரிக்கும் நூல்
a) சிலப்பதிகாரம்
b) பத்துப்பாட்டு
c) சாகுந்தலம்
d) மதுரைக்காஞ்சி✅
25. பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர்
a) விஷ்ணுசர்மா✅
b) விசாகதத்தர்
c) காளிதாசர்
d) வராகமித்திரர்
26. குப்தர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகைதந்த சீனப்பயணி
a) யுவான்சுவாங்
b) பாஹியான்✅
c) மார்கோபோலோ
d) மெகஸ்தனிஸ்
27. தமிழ்நாட்டில் புலிகள் சரணாலயம் உள்ள இடம்
a) வேடந்தாங்கல்
b) கோடியக்கரை
c) முண்டந்துறை✅
d) வேதாரண்யம்
28. இரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ள இடம்
a) எழும்பூர்
b) பெரம்பலூர்
c) ஆவடி
d) பெரம்பூர்✅
29. கேரள மாநிலத்திற்கு உரித்தான நாட்டியக் கலை
a) கதகளி✅
b) குச்சுப்புடி
c) மணிபுரி
d) பரதநாட்டியம்
30. ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்
a) வட அமெரிக்கா
b) ஆசியா
c) தென் அமெரிக்கா✅
d) ஆஸ்திரேலியா
#  அலெக்சாண்டர் படையெடுப்பின் போது மகதத்தை ஆண்ட வம்சம் எது

A   சிசுனகஸ்

B   நந்தாஸ்

C   மௌரியாஸ்

D   கோசலாஸ்

Answer  B



#  அசோகர் கலிங்க நாட்டின் மீது எந்த ஆண்டு போர் தொடுத்தார்

A   கி  மு 261

B   கி  மு 235

C   கி  மு 285

D   கி  மு 275

Answer  A



#  இண்டிகா என்ற நூலை எழுதியவர்

A   அசோகர்

B   சாணக்யர்

C   மெகஸ்தனிஸ்

D   செலெயுகஸ்

Answer  C



#  பிந்துசாரா அரசவைக்கு வந்த சிரியா நாட்டின் தூதர் யார்

A   மெகஸ்தனிஸ்

B   திமாச்சஸ்

C   தியான்சியஸ்

D   அமித்ரோசட்ஸ்

Answer  B



#  ஒவ்வொரு மனிதரும் எனது குழந்தைகள் என்று அசோகரின் எந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது

A   5  ம் பாறைக் கல்வெட்டு

B   4  ம் பாறைக் கல்வெட்டு

C   6  ம் பாறைக் கல்வெட்டு

D   7  ம் பாறைக் கல்வெட்டு

Answer  A



#  அசோகர் புத்த மதத்திற்கு மாரியதைப் பற்றிக் கூறும் கல்வெட்டு எது

A   பாப்ரு பாறைக் கல்வெட்டு

B   கலிங்கா பாறைக் கல்வெட்டு

C   தாரை பாறைக் கல்வெட்டு

D   பராபர் குகைப்பாறைக் கல்வெட்டு

Answer  A



#  சந்திரகுப்தரின் அரசவைக்கு மெகஸ்தனிஸை அனுப்பிய கிரேக்க மன்னர் யார்

A   செலியூஷியஸ் நிகேட்டர்

B   அந்தியோசஸ்

C   போட்லெமி

D   மாகஸ்

Answer  A



#  அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் நீளமானது எது

A   7th பாறைக் கல்வெட்டு

B   11th பாறைக் கல்வெட்டு

C   13th பாறைக் கல்வெட்டு

D   9th பாறைக் கல்வெட்டு

Answer  C



#  மிருக வதைத்தினை தடை செய்யும் அசோகக் கல்வெட்டு எது

A   3  ம் பாறைக் கல்வெட்டு

B   முதலாம் பாறைக் கல்வெட்டு

C   4  ம் பாறைக் கல்வெட்டு

D   5  ம் பாறைக் கல்வெட்டு

Answer  B



#  மௌரிய காலத்தில் முத்திர தயக்ஷா வரி எதனோடு தொடர்புடையது

A   வன உற்பத்தி

B   துறைமுகங்கள்

C   வர்த்தகம்

D   கடவுச்சீட்டு

Answer  D



#  மௌரிய காலத்தில் அங்காடி மற்றும் அதிலுள்ள தவறான செயல்பாடுகளை பார்வையிடுபவர் யார்

A   சம்ஸ்தத்யக்ஷா

B   சித்தத்யக்ஷா

C   அகராதத்யக்ஷா

D   மனதத்யக்ஷா

Answer  A



#  மௌரிய நிர்வாகத்தில் சுரங்கத் துறையின் தலைவர் பெயர் என்ன

A   தாவரிக்கா

B   அந்தபால்

C   கார்மந்திகா

D   பௌரா

Answer  C
#  கீழ்கண்ட எவை ஹரப்பா மக்களின் தெய்வம் இல்லை

A   சிவன்

B   பெண் தெய்வம

C   அரசமரம்

D   விஷ்னு

Answer  D



#  இரண்டாவது புத்த மத மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் யார்

A   மஹாகாஷபா

B   வசுமித்ரா

C   மோக்லிபுத்ரா திஷா

D   சபாகமி

Answer  D



#  எந்த புத்த மதக் கூட்டத்தின் போது புத்த மதம் மகாயானம்   ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது

A   முதலாம் புத்த மாநாடு

B   இரண்டாம் புத்த மாநாடு

C   மூன்றாம் புத்த மாநாடு

D   நான்காம் புத்த மாநாடு

Answer  D



#  சோமாபுரி பல்கழைக்கழகத்தை நிறுவிய பால மன்னர் யார்

A   கோபாலா

B   குமர்பாலா

C   தர்மபாலா

D   ராமபாலா

Answer  C



#  முதல் சமணக்கூட்டம் எங்கு நடைபெற்றது

A   பாவபுரி

B   பாடலிபுத்திரா

C   ஜிம்பிகாகிராமா

D   வைஷாலி

Answer  B



#  யார் தலைமையில் சேவேதம்பரா பிரிவு உருவாக்கப்பட்டது

A   பத்ரபாகு

B   ஸ்தலபாகு

C   சந்திரகுப்த மௌரியர்

D   அசோகர்

Answer  B



#  தென்னிந்தியாவில் யார் தலைமையில் சமண மதம் பரப்பப்பட்டது

A   ஸ்தலபாகு

B   பத்ரபாகு

C   அசோகர்

D   சந்திரகுப்த மௌரியர்

Answer  B



#  சமண மதத்தை ஏற்றுக்கொண்ட அசோகனின் பேரன் யார்

A   சம்ப்ரதி

B   குணாலா

C   தசரதா

D   சலிசுகா

Answer  A



#  கீழ்கண்ட எவை புத்த சமண மதங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை

A   இரண்டும் பிராமனக்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதி முறையை எதிர்க்கிறது

B   இரண்டும் மறுபிறப்பு என்ற கொள்கையை ஒத்துக் கொள்கிறது

C   இரண்டும் உண்மை மற்றும் அகிம்சையை வலியுறுத்துகிறது

D   மேற்கண்ட அனைத்தும்

Answer  D



#  பண்டைக்கால மஹாஜனபதங்களின் தட்சசீலம் எதன் தலைநகரம்

A   கந்தர்

B   அங்கா

C   மகதா

D   காசி

Answer  A



#  சிசுநாகா வம்சத்தின் கடைசி மன்னர் யார்

A   காலஷோகா

B   நந்திவர்தன்

C   நாக  தசாக்

D   உதயன்

Answer  B



#  நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் யார்

A   மஹாபத்மானந்தா

B   சிசுநகா

C   தனநந்தா

D   நந்திவர்தன்

Answer  A
#  ரிக் வேத காலத்தில் மனிதனுக்கும் கடவுளர்க்கும் உறவுப்பாலமாக விளங்கியவர் யார்

A   வருணன்

B   இந்திரன்

C   அக்னி

D   வாயு

Answer  C



#  ப்ரகத் சம்ஹிதா   என்ற நூலை இயற்றியவர்

A   வராகிமிகிரர்

B   ஆர்யபட்டர்

C   அமரசிம்மர்

D   சரகர்

Answer  A



#  தேவனாம்பிரியர்   என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்

A   கௌதமபுத்ர சதகர்ணி

B   கௌடில்யர்

C   புஷ்யமித்ரர்

D   அசோகர்

Answer  D



#  அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து   யாருடைய வரலாறு அறியப்பட்டது

A   அசோகர்

B   சமுத்திரகுப்தர்

C   ஹர்ஷவர்த்தனர்

D   காரவேலா

Answer  B



#  கனிஷ்கர்   இரண்டாம் அசோகர்   என அழைக்கப்பட காரணம்

A   அவரது புத்தமதக் கொள்கை

B   அவரது வெற்றி

C   அவரது நிர்வாகம

D   அவரது சமய பொறையுடைமை

Answer  A



#  இந்திய   தொல்லியலின் தந்தை   என்றழைக்கப்பட்டவர் யார்

A   ஜான் மார்ஷல்

B   எஸ்  ஆர்  ராவ்

C   ஆர்  எஸ்  பிஸ்ட்

D   அலெக்ஸாண்டர்கன்னிங்ஹாம்

Answer  D



#  புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடம் அல்லாதது எது

A   சிராண்ட்

B   ஹல்லூர்

C   உட்னூர்

D   கர்னூல்

Answer  D



#  பண்டைக்கால இந்திய வரலாற்றின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்

A   இராபர்ட் புரூஸ்புட்

B   சர் வில்லியம் ஜோன்ஸ்

C   நு  து  ர் மார்கே

D   சர் ஜான் மார்ஷல்

Answer  A



#  பழங்கற்கால மனிதர்களின் முக்கியத் தொழில் எது

A   வேளாண்மை

B   விவசாயம்

C   வேட்டை

D   மீன்பிடி

Answer  C



#  R  D பானர்ஜியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளிப்பகுதி எது

A   கலி பங்கா

B   ஹரப்பா

C   லோத்தல்

D   மொகஞ்சதாரோ

Answer  D



#  முதன் முதலாக மாலத்தீவை கைப்பற்றிய சோழ மன்னர் யார்

A   இராஜராஜன்

B   முதலாம் ராஜேந்திரன்

C   இராஜாதிராஜன்

D   இரண்டாம் ராஜேந்திரன்

Answer  A



#  கீழ்கண்ட எந்த உபநிடதம் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது

A   ஈஷா

B   கத்தா

C   பிரிஹாதரன்யகா

D   ஸ்வேதஸ்வதரா

Answer  C
11.சென்னை தினம் – கொண்டாடப்படும் நாள் ?
a. ஆகஸ்டு 1
b. ஆகஸ்டு 12
c. ஆகஸ்டு 22 (விடை)
d. செப்டெம்பர் 1

12.’மெட்ராஸ் மகாணத்திற்கு’ தமிழ்நாடு எனப் பெயர்சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்யா ?
a. கோபண்ணா
b.வெங்கய்யா நாயுடு
c.கல்யாணசுந்தரனார்
d.சங்கரலிங்கனார் (விடை)

13.மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம் இயற்றப்ப்பட்ட ஆண்டு ?
a.1968 (விடை)
b.1969
c.1979
d.1989

14.’தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது எந்தஆண்டு ?
a.1956
b.1961
c.1968
d.1969 (விடை)

15.தமிழ்நாட்டில் கடைசியாக 2008 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டமாவட்டம் எது ?
a.சிவகங்கை
b.கிருஸ்ணகிரி
c.அரியலூர்
d.திருப்பூர் (விடை)

16.தமிழ்நாட்டிலுள்ள மொத்தமாவட்டங்களின் எண்ணிக்கை ?
a.30
b.32 (விடை)
c.28
d.29

17.அரியலூர்மாவட்டம் உருவாக்கப்பட்டஆண்டு ?
a.2001
b.2005
c.2007 (விடை)
d.2008

18.கன்னியாகுமரிமாவட்டத்தின் தலைநகர் எது ?
a.கன்னியாகுமரி
b. அகஸ்தீஸ்வரம்
c.குழித்துறை
d. நாகர்கோவில் (விடை)

19.சிதம்பரம்நாடாளுமன்றத் தொகுதி கீழ்கண்ட எந்தமாவட்டத்தில் உள்ளது ?
a.அரியலூர்
b.திருவண்ணாமலை
c.கடலூர் (விடை)
d.கிருஸ்ணகிரி

20.தமிழகத்தில் மிக அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாவட்டம் எது ?
a.சென்னை
b.திருநெல்வேலி
c. தூத்துக்குடி
d.அரியலூர் (விடை)
ஹார்மோன்கள்:
    வேதியியல் அடிப்படையில் ஹார்மோன்கள் புரதங்களாகவோ அல்லது ஸ்டீராடீய்களாகவோ உள்ளன. ஹார்மோன்கள் மிகக்குறைந்த அளவே சுரந்தாலும் செயல் திறனுள்ளவையாக உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பி:
    பட்டாணி அளவே உள்ள பிட்யூட்டரி சுரப்பி மூளையின் ஹைப்போதலாமஸோடு இணைந்துள்ளது. நாளமில்லாச் சுரப்பிகளைப் பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துவதால், நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என இதை அழைக்கலாம்.

பிட்யூட்டரி சுரப்பியின் கதுப்புகள்:
    பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பாக, அடினோஹைபோபைசிஸ் மற்றும் பின் கதுப்பாக நியூரோஹைபோபைசிஸ் அமைந்துள்ளன.

தைராய்டு சுரப்பி :
    கழுத்துப் பகுதியில் குரல்வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உடைய அமைப்பே தைராய்டு சுரப்பி ஆகும். இது தைராக்ஸின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இதில் டைரோசினும் (அமினோ அமிலம்), அயோடினும் உள்ளன.

தைராக்ஸினின் பணிகள்
வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
உடலின் வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுகிறது.
திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைதலை ஊக்குவிக்கிறது.
உடல் வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிப்பதால் இஃது ஆளுமை ஹார்மோன் எனவும் அழைக்கப்படுகிறது.
இரத்தத்தில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.
சிறுநீரகச் செயல்பாட்டையும், சிறுநீர்ப் போக்கையும் கட்டுப்படுத்துகிறது.
கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும்.
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.


அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும்.
பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன.
கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன.
பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.
திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.
முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்
'கற்றறிந்தார் ஏத்தும் கலி',  'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
(கலி ,133)
இந்திய அரசியலமைப்பு பகுதி - 16 | இந்திய மொழிகள்

இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.
ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும்.

அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழிகளாகும்.

2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.
மத்திய அரசின் திட்டங்களும் அவற்றின் குறிக்கோள்களும்.

‎பிரதான் மந்திரி கிரிசின்சாய் யோஜனா‬ - வேளாண்மை மற்றும் பாசன வசதித் திட்டம்

‪ஜனனி சுரக்ஷா யோஜ்னா‬ - சமூகப் பாதுகாப்பு திட்டம்

‪சுரக்ஷிட் கடியா அபியான்‬ - பாதுகாப்பான உணவுத் திட்டம்

பிரதன் மந்திரி சுரக்ஷா யோஜ்னா‬ - விபத்து காப்பீடு

பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜ்னா‬ - வேளாண் துறை

பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா‬ - சுரங்கங்கள் மேம்பாட்டு திட்டம்

ஜன் ஆய்ஷதி யோஜ்னா‬ - உயிர்காக்கும் மருந்துகள் மலிவான விலையில்

தீனதயாள் உபாத்தியாய கிராமின் கெளசல் யோஜ்னா‬ - ஊரகப் பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்க

வன்பந்து கல்யாண் யோஜ்னா‬ பழங்குடியினரின்நலன்

பிரதமமந்திரி ஜன்தன் யோஜ்னா‬ - வங்கிக்கணக்கு

கெளசல் விகாஸ் யோஜ்னா‬ - திறன் மேம்பாடு

பிரவேசி கெளசல் யோஜனா‬ - ஒருங்கிணைப்பு

சுகம்யா பாரத்‬ - மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயணம் செய்வதை உறுதி செய்யும் நோக்கில்.

ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா‬ - சுகாதாரம்
பிரதமரின் புதிய காப்பீட்டுத் திட்டங்கள்

பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

* பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூபாய் 2 இலட்சம் மதிப்புடைய காப்பீடுத்  திட்டமாகும்.

* வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18-50 வயதுடைய அனைவரும் வருடத்திற்கு ரூபாய்  330 -ஐ மட்டும் பிரிமியம் செலுத்தி இக்காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

* இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஒய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

* வங்கியின் விருப்பத்தை பொறுத்து எல்ஐசி மூலமாகவோ அல்லது மற்ற காப்பீடு நிறுவனங்களின் வழியாகவோ இந்த திட்டம் வழக்கப்படும்.

அடல் பென்சன் யோஜனா

* 18-40 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அடல் பென்சன் யோஜனா திட்டதில் சேரலாம்.

* குறைந்தபட்ச வைப்பு பென்சன் தொகை மத்திய அரசால் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

* ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ. 1000 முதல் 5000 வரை பென்சன் பெறலாம்.

* வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதி உடைய அனைவரும் சுரக்ஷா பீமா யோஜனா, ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா ஆகிய மூன்று திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
பிழை திருத்தம்

ஒருமை பன்மை - பிழை திருத்தம்

வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:
பிழை:  வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா

பிழை:    அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள

பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்

பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை

பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா

பிழை: ஒன்றோ அல்லது இரண்டோ தருக
திருத்தம்: ஒன்றோ இரண்டோ தருக

பிழை: சென்னை என்ற நகரம்
திருத்தம்: சென்னை என்னும் நகரம்

பிழை: எனது மகன்
திருத்தம்: என் மகன்

பிழை: ஏற்கத் தக்கது அல்ல
திருத்தம்: ஏற்கத் தக்கது அன்று

பிழை: அவளது தந்தை
திருத்தம்: அவள் தந்தை

பிழை: புலி வந்தன
திருத்தம்: புலி வந்தது

பிழை: எருதுகள் ஓடியது
திருத்தம்: எருதுகள் ஓடின

பிழை: பூக்கள் மலர்ந்து மணம் வீசியது
திருத்தம்: பூக்கள் மலர்ந்து மணம் வீசின
பிழை: இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
திருத்தம்: இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே

பிழை: எனக்குப் பல வீடுகள்உள
திருத்தம்: எனக்கு வீடுகள் பல உள்ளன

பிழை: இது பொது வழி அல்ல
திருத்தம்: இது பொது வழி அன்று

பிழை: விழாவில் பல அறிஞர் பேசினர்
திருத்தம்: விழாவில் அறிஞர்கள் பலர் பேசினர்

பிழை: தென்றல் மெல்ல வீசின
திருத்தம்: தென்றல் மெல்ல வீசியது

பிழை: வாகனத்தை இடது பக்கம் திருப்பாதே
திருத்தம்: வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே

பிழை: பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
திருத்தம்: பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது

பிழை: வலது பக்கச் சுவரில் எழுதாதே
திருத்தம்: வலப்பக்கச் சுவரில் எழுதாதே

பிழை: ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
திருத்தம்: ஒவ்வொரு சிற்றூரிலும் ஊராட்சி உள்ளது.

பிழை: மாணவர்கள் கல்வியறிவு ஒழுக்கத்திற் சிறந்து விளங்க வேண்டும்.
திருத்தம்: மாணவர்கள் கல்வியறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிழை: அவர் தான் கூறினார் இவர் தான் கூறினார் என்று பாராது எவர் தான் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க
திருத்தம்: அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.

பிழை: நல்லவகைளும் கெட்டவைகளும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
திருத்தம்: நல்லனவும், கெட்டனவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.

பிழை: கண்ணன் முருகன் மற்றும்வேலன் வந்தனர்.
திருத்தம்: கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.

பிழை: சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
திருத்தம்: சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமரி அன்று.

பிழை: தலைவி தலைவனோடு சென்றார்
திருத்தம்: தலைவி தலைவனோடு சென்றாள்

பிழை: இதனைச் செய்தவர் இவரல்லவா?
திருத்தம்: இதனைச் செய்தவர் இவரல்லரோ?

பிழை: பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
திருத்தம்: பெரியனவும், சிறியனவுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
#shortcut #TNPSC

NATIONAL PARK:

1.corbe"TT" national park- uTTarakhand

HINT:"tt" in both

2.MADHYA PRADESH-3 famous national park

*KANHA(கனகா") NATIONAL PARK
*BANDAVGARH("பந்தா") NATIONAL PARK
*PENCH( "பெண்") NATIONAL PARK

Shortcut:"கனகா" என்கிற "பெண்" "பந்தா"  செய்வாள்.


GK 29/11/1016
பொது அறிவு

1. அன்னிபெசண்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கம் துவங்கிய ஆண்டு? 1916

2. இந்தியாவின் மூன்றாம் குடியரசுத் தலைவர் யார்? ஷாகிர் உசேன்

3. ரௌலட் சட்டம் வெளியிடப்பட்டபோது மகாத்மா காந்தி எந்த இடத்தில் இருந்தார்? தமிழ்நாடு

4. குடியரசுத்தலைவர் யார் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்? முதன்மை நீதிபதியின்

5. தமிழ்நாட்டில் தனி நபர் சத்தியாகிரகத்திற்காக சிறை சென்ற முதல் வீரர் யார்? டி.எஸ்.எஸ்.ராஜன்

6. எந்த மாநிலத்திற்கென தனியாக அரசியலமைப்பு உள்ளது? ஜம்மு காஷ்மீர்

7. இந்திய சுதந்திரத்தின்போது தமிழக முதல்வராக இருந்தவர் யார்? ஓமந்தூர் ராமசாமி

8. மக்களவை சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய நடைமுறையில் உள்ள முறை? மக்களவையின் நம்பிக்கையின்மை வாக்கெடுப்பால்

9. ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட இடம் எது? வேதாரண்யம்

10. பஞ்சாயத்து ராஜ் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? 1959

11. வேலு நாச்சியார் எந்த சீமையைச் சார்ந்தவர்? சிவகங்கை

12. இந்தியாவில் நிதி நெருக்கடி நிலைமை (Financial Emergency ) இதுவரை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது? ஒருமுறையும் இல்லை

13. தேவதாசி முறையை ஒழிக்க போராடிய சமூகப் போராளி யார்? மூவலூர் இராமாமிர்தம்

14. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரால் நியமிக்கப்படுகின்றனர்? ஜனாதிபதியால்

15. தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்றமைனர் - என்ற நாவலை எழுதியவர் யார்? மூவலூர் இராமாமிர்தம்

16. இந்திய அரசு சட்டம் 1935 ன் படி மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு எது? 1937

17. தியாகராஜபாகவதருக்கு ஏழிசை மன்னர் எனப் பட்டமளித்தவர் யார்? தருமாம்மாள்

18. கிராம பஞ்சாயத்துக்களை குறிப்பிடும் அரசியலமைப்பு சரத்து எது? சரத்து 40

19. சாரதா மகளிர் சங்கம் துவங்கியவர்? சுபலட்சுமி

20. உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது? 65

21. இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர் யார்? எஸ்.சுப்பிரமணியஐயர்

22. 1920- ஆம் ஆண்டு நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக செயல்பட்ட தமிழர் யார்? விஜயராகவாச்சாரி

23. சுதந்திரத்திற்கு முன்பு எத்தனை காங்கிரஸ் தேசியமாநாடுகள் சென்னையில் நடைபெற்றன? 7

24. தமிழ்நாட்டில் மிதவாதிகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? விஜயராகவாச்சாரி

25. தமிழ் நாட்டு திலகர் என அழைக்கப்பட்டவர் யார்? வ.உ.சி

தமிழ்-குறிப்புகள்
பொருத்துக

1.இயற்கை ஓவியம்-பத்துப்பாட்டு
2.இயற்கை இன்பக்கலம்-கலித்தொகை
3.இயற்கை வாழ்வில்லம்-திருக்குறள்
4.இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்-சிலப்பதிகாரம்,மணிமேகலை

1.இயற்கை தவம்-சிந்தாமணி
2.இயற்கை பரிணாமம்-கம்பராமாயணம்
3.இயற்கை அன்பு-பெரியபுராணம்
4.இயற்கை இறையுறையுள்-தேவாரம்,திருவாசகம்,திருவாய்மொழி.

1.காதல் இலக்கியம்-சீவகசிந்தாமணி
2.நீதி இலக்கியம்-நாலடியார்
3.வீர இலக்கியம்-புறநானூறு
4.பக்தி இலக்கியம்-பெரியபுராணம்

தந்தை-மகன்
1.இராமன்-லவன்,குசன்
2.இலட்சுமணன்-அங்கதன்,சந்திரகேசன்
3.பரதன்-தகன்,புஷ்கலன்
4.சத்ருகணன்-சூரசேனன்,சூடாஜி.
                  
News on 29/11/2016
பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!

டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தியே வாங்க உள்ளனர்பணமில்லா கோவா :

கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட உள்ளது. மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.

மொபைலில் வியாபாரம் :

ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும். சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.

மக்களிடம் விழிப்புணர்வு :

பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்

இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :

இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு. இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின் கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால், அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை பயன்படுத்தி செய்யலாம்.
உடுமலை நாராயணக்கவி

இயற்பெயர் : நாராயணசாமி
பெற்றோர் : கிருஷ்ணசாமி-முத்தம்மாள்
பிறந்த ஊர் : உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
காலம் : 25.9.1899 - 23.5.1981
சிறப்புப் பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
புலவர் பாலசுந்தரம்பிள்ளை இவருக்கு ஆசிரியராக இருந்தார். முத்துசாமிக் கவிராயரிடம் சுமார் 15 அண்டுகள் தமிழ்க் கல்வியைக் கற்றார். தவத்திரு சங்கரதாசு சுவாமிகளிடம் நாடகத்தையும், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதை இசைக் கலையையும் கற்றுக் கொண்டார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் திரை உலகிற்கு வந்தவர்
நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்
சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாகத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
திரைப்படப் பாடல்களை வருணனையை விட்டுக் கருத்தை நோக்கி நகர்த்தியவர்
உடுமலையாரைப் போலப் புலமைப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் எவருமில்லை. உடுமலையாரின் திரைப்பட பாடல்கள் குறித்து “நாம் எழுதும் பக்கம் பக்கமான வசனங்களுக்குப் பத்து வார்த்தைகளில் பாடல்களின் மூலம் கருத்தினை விளக்கிடுவார்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
நகைச்சுவை மன்னன் கலைவாணரின் கணிப்பில் இவர் ஒரு திரையுலக பாரதி, பாட்டுகளின் வயிற்றில் பகுத்தறிவு பால் வார்த்தவர். திரைப் பாடல்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர்.
பாடல்கள்
“போகாதே போகாதே என்கணவா
பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்’’
“பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே’’
“இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே இங்கிலீசு படித்தாலும் இந்தத் தமிழ்நாட்டிலே’’
“விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது’
“பட்டணந்தான் போகலாமடி - பொம்பளே பணங்காசு தேடலாமடி’’
பொதுத்தமிழ் இலக்கணம் -
 பொருள்கோள்

ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர். பொருள்கோள் எண்வகைப்படும்.
1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
2. மொழிமாற்றுப்பொருள்கோள்
3. நிரல்நிறைப்பொருள்கோள்        
4. விற்பூட்டுப்பொருள்கோள்
5. தாப்பிசைப்பொருள்கோள்        
6. அளைமறிபாப்புப்பொருள்கோள்
7. கொண்டுகூட்டுப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்

1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
இடையறாது செல்லும் ஆற்றுநீரைப்போலப் பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள்கொள்வது ஆற்றுநீர்ப்பொருள்கோளாகும்.
(எ.கா.)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாய் வார். - குறள், 6

பொறிவாயில் ஐந்தவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாகக்கொண்ட ஐவகை ஆசைகளையும்விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியில் நின்றவர்; நீடு வாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வர். இக்குறட்பாவில் பொறிவாயில் எனத் தொடங்கி, நீடுவாழ்வார் என்பது வரையிலுள்ள சொற்கள் முன்பின்னாக மாற்றம் பெறாமல் தொடர்ச்சியாக அமைந்து பொருள்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. ஆதலின் இப்பாடல், ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆயிற்று.
2. மொழிமாற்றுப்பொருள்கோள்
ஓரடியுள் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் மொழிமாற்றுப்பொருள்கோள் என வழங்கப்படும்.
(எ.கா.)     சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
        யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
        கானக நாடன் சுனை.
இப்பாடலை அப்படியே படித்தால் பொருள் தெளிவு இருக்காது.  இதனைச் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு (முயல்) நீத்து என அந்தந்த அடியிலுள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் வேண்டும்.

3. நிரல்நிறைப்பொருள்கோள்
செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறைமாற்றாமல், வரிசையாக அமைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறைப்பொருள்கோள் ஆகும்.
(எ.கா.)     அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாய்க்கை
        பண்பும் பயனும் அது. - குறள், 45
இக்குறட்பாவில் அன்புக்குப் பண்பும், அறத்துக்குப் பயனும் நிரல்நிறையாக வந்து அமைந்துள்ளதனால், இப்பாடல் நிரல்நிறைப்பொருள்கோள் ஆயிற்று.
தமிழில் உள்ள தொகைச் சொற்கள்

இருமை        -    இம்மை, மறுமை
இருவினை    -    நல்வினை, தீவினை
இருதிணை    -    உயர்திணை, அஃறிணை
இருசுடர்        -    ஞாயிறு, திங்கள்
ஈரெச்சம்        -    வினையெச்சம், பெயரெச்சம்
மூவிடம்        -    தன்மை,முன்னிலை, படர்க்கை
முந்நீர்        -    ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
முப்பால்        -    அறத்துப்பால், பொருட்பால்,   காமத்துப்பால்
முத்தமிழ்    -    இயற்றமிழ், இசைத்தமிழ்,  நாடகத்தமிழ்
முக்காலம்    -    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
மூவேந்தர்    -    சேரன், சோழன், பாண்டியன்
முக்கனி    -    மா, பலா, வாழை
நான்மறை    -    ரிக், யசூர், சாம, அதர்வணம்
நாற்குணம்    -    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாற்படை    -    தேர், யானை, குதிரை, காலாள்
நாற்றிசை    -    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நாற்பால்
தமிழ் இலக்கணம் - சொல் வகை
சொல் வகை

தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை வருமாறு:
1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்

(எடு.)
மலை - பெயர்ச்சொல்
சென்றான் - வினைச்சொல்
ஐ - இடைச்சொல்
மா - உரிச்சொல்
சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறு நான்கு வகையாகப் பிரிப்பர். அவை வருமாறு:
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

இயற்சொல்:

இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நிலத்தில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.
(எ.டு.) மரம், வந்தான்
செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
                                     (நன்னூல்:271)


திரிசொல்:
திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.
(எ.டு)
கிள்ளை, தத்தை, சுகம் -
கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.
வாரணம் -
யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.

ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்
பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும் (நன்னூல் : 272)
                               

திசைச்சொல்:

திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.
(எடு.)
சிறுகுளம் - இதனைப் ‘பாழி’ என்பர் பூழிநாட்டார்; ‘கேணி’ என்பர் அருவாநாட்டார்.

செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப
                                 (நன்னூல் : 273)

வடசொல்:

வடசொல் என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும் உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.
(எடு.)
காரியம், காரணம் - பொது எழுத்தால் அமைந்தன.
போகி, சுத்தி - சிறப்பெழுத்தால் அமைந்தன.
கடினம், சலம் - இருவகை எழுத்தாலும் அமைந்தன.

பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைவன வடசொல்
                             (நன்னூல் : 274)
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - அம்பை
அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷ்மி
பிறப்பு : 1944

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர்.

1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்.

பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி.

பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் தொட்டுச் சென்றவர்.

உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர்.

பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர்.

தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
இவர் “SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

டாக்டர் சி. எஸ் லட்சுமி  (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
1976இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் . ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
வெளிவந்த முக்கிய நூல்கள்
அந்தி மாலை (நாவல்)
சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்)
வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை
காட்டில் ஒரு மான்
சக்கர நாற்காலி
ஸஞ்சாரி
தண்ணியடிக்க
வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)
சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)

ஆங்கில மொழிபெயர்ப்பில்
A Purple Sea (1992),
In a Forest
A Deer (2006)
The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்)
அம்பை எழுதிய பிற சிறுகதைகள்
கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்
ம்ருத்யு
கறுப்புக் குதிரைச் சதுக்கம்
அன்னங்களும் பட்சிகளும்
மிலேச்சன்
ஓர் எலி, ஓர் துருவி
பிரசுரிக்கபடாத கைப்பிரதி
பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்
ஒருவர் மற்றொருவர்
அறைக்குள்ளிருந்தவன்
ஸஞ்சாரி
சிறகுகள் முறியும்
சில மரணங்கள்
சூரியன்
தனிமையெனும் இருட்டு
புனர்
சக்கர நாற்காலி
வாகனம்
வல்லூறுகள்
வாமனன்
த்ரிசங்கு
வயது
ஒட்டக சவாரி
அணில்
உடம்பு
வயது பதினைந்து
திக்கு
ஆரம்பக் காலக் கவிதைகள்
அம்மா ஒரு கொலை செய்தாள்
ஒரு கட்டுக்கதை
காட்டில் ஒரு மான்
மல்லுக்கட்டு
அடவி
ஆறு
ஆள்காட்டி விரல்
மஞ்சள் மீன்
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
வெளிப்பாடு
TNPSC மாதிரி வினாத்தாள் - 1



1. பலசமயக் கடவுளரையும் போற்றி நூல்கள் பல இயற்றியவர்?

A. பாரதியார் B. சொக்க நாதப்புலவனார்

C. திரு.வி.க. D. சி.இலக்குவனார்

2. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர்.

A. தாயுமானவர் B. வள்ளலார்

C. குணங்குடிமஸ்தான் D. சுத்தானந்த பாரதியார்

3. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என்ற சிறப்புக்குரியது?

A. பாபிலோன் B. ஆப்பிரிக்கா

C. மஞ்சளாற்றுப்படுகை D. லெமூரியாக்கண்டம்

4. “மருந்து” என்ற தலைப்பின்கீழ்ச் செய்திகளைக் கூறும் நூல்?

A. திருக்குறள் B. திரிகடுகம்

C. ஏலாதி D. சிறுபஞ்சமூலம்

5. “குமரி” என்ற பெயர்கொண்ட மூலிகை ?

A. கண்டங்கத்திரி B. கற்றாழை

C. தூதுவளை D. ஆடுதொடாப்பாளை

6. ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் பண்டைத் தமிழ் நூல் ?

A. மலைபடுகடாம் B. பட்டினப்பாலை

C. பழமொழி நானூறு D. சிலப்பதிகாரம்

7. “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்ற போற்றுதலுக்கு உரியவர் ?

A. முத்துலட்சுமி ரெட்டி B. பாலம்மாள்

C. இராமாமிர்தத்தம்மா D. அஞ்சலையம்மாள்

8. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்துக.

I II

அ. தென்னாட்டு ஜான்சிராணி 1. தென்னாப்ரிக்கா

ஆ. வள்ளியம்மை 2. முத்துலட்சுமி

இ. இந்துப் பல்கலைக்கழகம் 3. அஞ்சலையம்மாள்

ஈ. இந்தியாவின் முதல் பெண்

மருத்துவர் 4. அன்னிபெசண்ட்

அ ஆ இ ஈ

A. 2 1 4 3

B. 2 4 3 2

C. 3 1 4 2

9. உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய முதல் குரல் இடம் பெற்ற நூல்.

A. திருக்குறள் B. நெடுநல்வாடை

C. பழமொழிநானூறு D. மணிமேகலை

10. விண்ணில் தாமே ஒளிவிடக் கூடியவற்றுக்குத் தமிழர் வைத்த பெயர்.

A. கோள்மீன் B. நாள்மீன்

C. கிரகணம் D. ஒளிச்சிதறல்

11. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு

1. இந்தியா

2. மலேசியா

3. சிங்கப்பூர்

4. இலங்கை

A. அனைத்தும் சரி B. 1, 2, 3, சரி

C. 2, 3, 4 சரி D. 2, 3, சரி

12. “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்று சொன்னவர் ?

A. முன்றுறையரையனார் B. கபிலர்

C. பரணர் D. ஔவையார்

13. பொருந்தாததைக் கண்டறி.

A. சிறந்த ஊர்களைக் குறிக்கும் பின்னொட்டு புரம்

B. கடற்கரை நகரம் பட்டினம்

C. கடற்கரைச் சிற்றூர் பாக்கம்

D. மருதத்திணையுடன் தொடர்புடையது குப்பம்.

14. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. திருவண்ணாமலை B. வால்பாறை

C. கோவில்பட்டி D. கிருஷ்ணகிரி

15. இந்தியாவின் உயர்ந்த விருதாகிய “பாரத ரத்னா” என்ற விருதினைப் பெற்ற தமிழ்நாட்டவர் ?

A. அம்பேத்கர் B. காமராசர்

C. எம்.ஜி.ஆர் D. முத்துராமலிங்கத்தேவர்

16. சென்னை மாகாணத்திற்குத் “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிச் சட்டம் இயற்றியவர் .

A. அண்ணாதுரை B. காமராசர்

C. கருணாநிதி D. பக்தவச்சலம்

17. பொருந்தாததைக் கண்டறி: ஜி.யூ.போப்

A. திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

B. திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

C. Elementary Tamil Grammar என்ற நூலை எழுதியவர்

D. அயர்லாந்தைச் சேர்ந்தவர்

18. ஜோசப் பெஸ்கிக்கு “தைரியநாதர்” என்ற பட்டம் அளித்தவர்கள்.

A. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்

B. கிழவன் சேதுபதி

C. சுப்பிரதீபக் கவிராயர்

D. தென்னிந்திய கிறித்தவச் சபையார்

19. பொருந்தாததைக் கண்டறிக

சென்னையில் இவர்கள் பெயரில் சிறந்த நூல்நிலையங்கள் அமைந்துள்ளன.

A. பெருஞ்சித்திரனார்

B. உ.வே.சா

C. தேவநேயப்பாவாணர்

D. மறைமலையடிகள்

20. இன்றுள்ள தமிழ்ப் பேரகராதியில் காணப்படும் பிழைகளைச் சுட்டிக்காட்டி நூல் எழுதியவர்.

A. மறைமலையடிகள்

B. திரு.வி.க.

C. பரிதிமாற்கலைஞர்

D. தேவநேயப்பாவாணர்

21. பொருத்துக

அ. என்வாழ்க்கைப்போர் 1. பெருஞ்சித்திரனார்

ஆ. தமிழ்ச்சிட்டு 2. இலக்குவனார்

இ. என்சரித்திரம் 3. தெ.பொ.மீ

ஈ. கானல்வரி 4. உ.வே.சா.

அ ஆ இ ஈ

A. 1 3 4 2

B. 2 3 4 1

C. 2 1 4 3

D. 4 1 2 3

22. தொடர்ச்சியாக 99 பூக்களின் பெயர்களைக் கூறும் நூல்.

A. பரிபாடல்

B. குறிஞ்சிப்பாட்டு

C. திருமுருகாற்றுப்படை

D. முல்லைப்பாட்டு

23. பரிதிமாற்கலைஞர்

அ. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்.

ஆ. அங்கம் என்ற நாடக வகைக்கு மானவிஜயம் என்ற நாடகத்தை எழுதியவர்

இ. ரூபாவதியாகவும், கலாவதியாகவும் பெண்வேடம் இட்டு நடித்தவர்.

ஈ. சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர்.

A. அ, இ, சரி

B. அ, இ, தவறு

C. அ, ஆ, இ சரி

D. அனைத்தும் சரி

24. பொருந்தாததைக் காண்க.

A. கள்ளர் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

B. தமிழ்ப் பேரகராதியைப் பதிப்பித்தவர்

C. திராவிட சாஸ்திரி என்று அழைக்கப்படுவர் சத்தியமூர்த்தி

D. நாவலர் என்ற பட்டம் பெற்றவர்கள் சோமசுந்தர பாரதியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

25. கடல் பயணத்தை “முந்நீர் வழக்கம்” என்று குறிப்பிடும் நூல்.

A. தொல்காப்பியம்

B. குறுந்தொகை

C. பட்டினப்பாலை

D. நெடுநல்வாடை

26. கோடிட்ட இடத்தை நிரப்புக.

பண்டைக் காலத்தில் பெரிய கப்பல்களை ………………… என்று அழைத்தனர்

A. பாய்பரம்

B. கட்டுமரம்

C. நாவாய்

D. தெப்பம்

27. பொருத்துக.

அ. கலைகளின் சரணாலயம் 1. கும்பகோணம்

ஆ. ஓவியம் 2. நாட்டியம்

இ. விறலி 3. கண்ணெமுத்து

ஈ. நாதப்படிகள் 4. தாராசுரம்கோயில்

அ ஆ இ ஈ

A. 1 2 3 4

B. 2 3 1 4

C. 4 2 1 3

D. 4 3 2 1

28. கருத்துப்படத்தைத் தொடங்கியவர்

A. வால்ட்டிஸ்னி

B. ஈஸ்ட்மன்

C. எட்வர்ட்

D. பிரான்சிஸ் சென்கின்ஸ்

29. “ஒருபிடிசோறு” என்ற சிறுகதையின் ஆசிரியர்.

A. சு. சமுத்திரம்

B. கல்கி

C. புதுமைப்பித்தன்

D. ஜெயகாந்தன்

30. 2002 இல் ஞானபீட விருது பெற்றவர்.

A. அகிலன்

B. ஜெயகாந்தன்

C. சிதம்பரரகுநாதன்

D. வல்லிக்கண்ணண்

31. “மாபாவியோர் கூடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர் என்ற வசனத்தால் எற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்.

A. பரிதிமாற்கலைஞர்

B. சங்கரதாஸ்சுவாமிகள்

C. பம்மல் சம்பந்தனார்

D. சோ

32. நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை – என்று குறிப்பிடப்படுபவள்.

A. மாதவி

B. மணிமேகலை

C. சித்திராங்கி

D. சித்திராதேவி

33. தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் “உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று” என்று நேரு குறிப்பிடும் நூல் ?

A. தாய்

B. போரும் அமைதியும்

C. சோபியின் உலகு

D. இடைவேனிற் பருவத்து நள்ளிரவு

34. “சீட்டுக்கவி” என்பது

A. சொல்லணியுள் ஒன்று

B. கவிஞர் வகையுள் ஒன்று

C. செய்யுட்கடிதம்

D. விளையாட்டுச் சீட்டு

35. பொருந்தாததைக் காண்க.

A. புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கு பெற்றவர் வல்லிக்கண்ணன்

B. உலகின் முதல் புதுக்கவிதையை எழுதியவர் வால்ட்விட்மன்

C. ”ழ” என்பது ஒரு புதுக்கவிதை இதழ்

D. வெளிச்சம் வெளியே இல்லை என்ற புதுக்கவிதையை எழுதியவர் அப்துல் ரகுமான்

36. பொருந்தாததைக் காண்க.

A. தீவுகள் கரையேறுகின்றன – ஈரோடு தமிழன்பன்

B. அமரவேதனை - சி.சு. செல்லப்பா

C. சர்ப்பயாகம் - சிற்பி

D. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் - மு.மேத்தா

37. “திரைக்கவித் திலகம்” என்று போற்றப்படுபவர்.

A. மருதகாசி

B. பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம்

C. உடுமலை நாராயணகவி

D. கண்ணதாசன்

38. மலைக்கள்ளன் என்ற மர்ம நாவலின் ஆசிரியர்.

A. நாமக்கல் கவிஞர்

B. தேசிகவிநாயகம் பிள்ளை

C. முடியரசன்

D. கு.ப. ராஜகோபாலன்

39. பாரசீக மொழியில் எழுதப்பட்ட கவிதை நூல் ருபாயதினைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

A. பாரதியார்

B. கவிமணி

C. நாமக்கல் கவிஞர்

D. வெங்கட்டராமன்

40. பொருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடு.

A. நேயர் விருப்பம் - அப்துல் ரகுமான்

B. அவர்கள் வருகிறார்கள் - மீரா

C. சர்ப்ப யாகம் - வைரமுத்து

D. ஊமைவெயில் - புவியரசு

41. “தமிழ் மூவாயிரம்” என்ற சிறப்பிற்குறிய நூல்.

A. மூவர்தேவாரம்

B. திவ்யப்பிரபந்தம்

C. பெரியபுராணம்

D. திருமந்திரம்

42. பொருத்துக.

அ. நாமார்க்கும் குடியல்லோம் 1. அப்பூதியடிகள்

ஆ. இப்போது இங்கவன் உதவான் 2. சுந்தரர்

இ. முகுந்த மாலை 3. அப்பர்

ஈ. தேவாரம் 4. குலசேகரர்

அ ஆ இ ஈ

A. 3 2 4 1

B. 2 4 1 3

C. 3 1 4 2

D. 4 2 3 1

43. உருவவழிபாட்டை மறுத்த சித்தர்.

A. கடுவெளிசித்தர்

B. அகத்தியர்

C. பட்டினத்தார்

D. கொங்கணச்சித்தர்

44. மீனவர்களின் அரிச்சுவடி

A. ஐலேசா

B. மீன்வலை

C. வெண்மணல்

D. விடிவெள்ளி

45. “நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா” என்று பாராட்டியவர்.

A. வாணிதாசன்

B. கண்ணதாசன்

C. பாரதிதாசன்

D. பாரதியார்

46. பாஞ்சாலி சபதத்தின் நூல் அமைப்பு

A. காண்டம் 2, சருக்கம் 5

B. காண்டம் 3, படலம் 3

C. காண்டம் 5, சருக்கம் 3

D. காண்டம் இல்லை, சருக்கம் 9

47. மூவர் உலாவில் புகழப்படுபவன்

A. ஒட்டக்கூத்தர்

B. குலோத்துங்கன்

C. கம்பர்

D. ராஜாதிராஜன்

48. தமிழ் விடுதூதில் தமிழின் நான்கு வரப்புகளாகக் கூறப்படுவன

A. பாக்கள்

B. அசைகள்

C. சீர்கள்

D. தளைகள்

49. பொருந்தாத ஒன்றைக் காண்க.

A. தேம்பாவணி - சூசையப்பர்

B. திருவிளையாடற்புராணம் - கொங்குவேள்

C. தருமிக்குக் கொடுத்தபாடல் -குறுந்தொகையில் உள்ளது

D. காரைக்கால் அம்மையார் - பெரியபுராணம்

50. கூற்று (A) : திருமாலைப் பாடாத ஆழ்வார் மதுரகவி ஆழ்வார்

காரணம் (R) : நம்மாழ்வாரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்

A. A சரி R தவறு

B. R சரி A தவறு

C. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் இரண்டும் தம்முள் பொருந்தவில்லை

D. இரண்டும் தவறு

51. சொல்லின் குற்றங்களாக மணிமேகலை கூறுவன.

A. 4

B. 6

C. 8

D. 5

52. வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்

A. சந்திரன் சுவர்க்கி

B. சடையப்பர்

C. சீதக்காதி

D. வரபதி ஆட்கொண்டான்

53. “எவ்வழிநல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று பாடியவர்.

A. கபிலர்

B. பாரதியார்

C. ஔவையார்

D. குமணன்

54. நெய்தற்கலியின் ஆசிரியர்.

A. நல்லந்துவனார்

B. கபிலர்

C. பேயனார்

D. இளநாகனார்

55. மறுபிறப்பு உணர்ந்தவளான மணிமேகலையில் குறிப்பிடப்படுபவள்.

A. சித்ராபதி

B. மணிமேகலை

C. தீவதிலகை

D. சுதமதி

56. நற்றிணையின் பேரெல்லை

A. 8 அடி

B. 9 அடி

C. 10 அடி

D. 13 அடி

57. பிள்ளைத்தமிழன் வகைகள்

A. 2

B. 4

C. 6

D. 10

58. யாதினும் இனிய நண்ப – என இராமன் கூறியது.

A. விசுவாமித்திரரை

B. பரதனை

C. குகனை

D. வாலியை

59. கல்விக்கு விளக்கம் என்று கூறப்படுவது.

A. புகழ்

B. அறிவு

C. செல்வம்

D. நல்உணர்வு

60. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்

A. திருவள்ளுவப்பயன்

B. குமரேச வெண்பா

C. ஞானக்குறள்

D. திருவள்ளுவமாலை

61. கோடிட்ட இடத்தை நிரப்புக.

அன்பில்லார் எல்லாம் ……………………………..

A. எதுமில்லார்

B. யாதுடையார்

C. தமக்குரியர்

D. வீணர்களே

62. உவப்பக்கூடி உள்ளப்பிரிதல்

A. அறிவர் தொழில்

B. வீணர்தொழில்

C. புல்லார் தொழில்

D. புலவர் தொழில்

63. “சம்பு” என்ற சொல்லின் பொருள்

A. கேவலம்

B. நாவல்

C. புதுமை

D. தேம்புதல்

64. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. மல்லல் - வளம்

B. பாற்றுதல் - போக்குதல்

C. தியங்கி - மயங்கி

D. மரை - காடு

65. “மங்கையர் கோன்” என்று அழைக்கப்படுபவர்.

A. சிவபெருமான்

B. திருமங்கையாழ்வார்

C. மங்கையர்க்கரசி

D. ஆண்டாள்

66. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

A. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணகவி

B. நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சுவாமிகள்

C. ஈசானதேசிகர் - சுவாமிநாதர்

D. வலவன்ஏவா வானஊர்தி - அகநானூறு



67. பிரித்தெழுதுக. எந்தாய்

A. என் + தாய்

B. எமது + தாய்

C. எந்தை + ஆய்

D. எ + தாய்

68. பிரித்தெழுதுக. காமுறுவர்

A. காம் + உறுவர்

B. கா + உறுவர்

C. காமுறு + அர்

D. காமம் + உறுவர்

69. பகுபத உறுப்பிலக்கணப்படி பிரிக்க. உரைத்தது

A. உரை + த் + த் + அ + து

B. உரைத்து + அது

C. உரை + த் + அது

D. உரை + தது

70. பொருத்துக: எதிர்ச்சொல் வகையில்

அ. சுருக்கல் 1. நிமிர்தல்

ஆ. குன்றல் 2. விரிதல்

இ. மடிதல் 3. விளங்கல்

ஈ வளைதல் 4. மிகைபடல்

அ ஆ இ ஈ

A. 3 2 4 1

B. 3 4 2 1

C. 4 3 1 2

D. 2 1 4 3

71. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A. குண்டலகேசி - நீலகேசி

B. மணிமேகலை - சீவகசிந்தாமணி

C. வளையாபதி - சிலப்பதிகாரம்

D. மணிமேகலை - வளையாபதி

72. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

A. வஞ்சினக்காஞ்சி

B. தொடாக்காஞ்சி

C. மகற்பாற்காஞ்சி

D. முதுமொழிக்காஞ்சி

73. உத்தரவு – என்ற பிறமொழிச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்

A. கட்டளை

B. உத்திரவு

C. உறுதிப்பாடு

D. ஆணை

74. சந்திப்பிழையற்ற தொடரைக் காண்க.

A. வாங்கிய புத்தகத்தைப் படித்தபின் திருப்பி கொடுத்தான்

B. வாங்கியப் புத்தகத்தைப் படித்தபின் திருப்பி கொடுத்தான்

C. வாங்கிய புத்தகத்தைப் படித்தபின் திருப்பிக் கொடுத்தான்

D. வாங்கியப் புத்தகத்தைப் படித்தபின் திருப்பிக் கொடுத்தான்

75. மரபுப்பிழையானதைக் காண்க

A. யானைக் கன்று

B. புலிப்பறழ்

C. மான்குட்டி

D. சிங்கக்குறளை

76. Cartoon – இவ் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.

A. கேளிக்கைப்படம்

B. கருத்துப்படம்

C. பொழுதுபோக்குப் படம்

D. கார்ட்டூன் படம்

77. ஒலி-ஒளி வேறுபாடு அறிந்து சரியானதைத் தேர்வு செய்க.

வேழம் வேலம் வேளம்

A. மரம் சிறை யானை

B. யானை சிறை மரம்

C. சிறை மரம் யானை

D. யானை மரம் சிறை

78. ரு – என்ற குறியீடு தமிழில் கீழ்வரும் எண்ணைக் குறிக்கும்.

A. 5

B. 6

C. 7

D. 8

79. யா என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்.

A. யார்

B. சுட்டு

C. துற

D. கட்டு

80. வேர்ச்சொல்லைக் கண்டறிந்து பொருத்துக.

அ. மாண்டான் 1. மாண்

ஆ. மாண்பு 2. சுட்டு

இ. சுட்டான் 3. சுடு

ஈ. சுட்டினான் 4. மாள்

அ ஆ இ ஈ

A. 1 4 3 2

B. 4 1 3 2

C. 4 1 2 3

D. 1 4 2 3

81. செதுக்கினான் – இதன் வேர்ச்சொல்

A. செது

B. செதுக்

C. செதில்

D. செதுக்கு

82. “கேள்” என்பதன் வினையாலணையும் பெயர்.

A. கேள் – கேள்வன் – வினையாலணையும் பெயர்.

B. கேள் – கேள்வி – வினையாலணையும் பெயர்.

C. கேள் – கேட்டவன் – வினையாலணையும் பெயர்.

D. கேள் – கேட்பு – வினையாலணையும் பெயர்.

83. பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு.

A. வாழ் – வாழாள் – வினை முற்று

B. ஓடு – ஓட - பெயரெச்சம்

C. கருமை – கரிய – குறிப்பு வினையெச்சம்

D. பெருமை – பெரிய – தெரிநிலைப் பெயரெச்சம்

84. அகரவரிசைப்படுத்துக. வடிவு, வட்டம், வடக்கு வாட்டம்

A. வட்டம், வடக்கு, வாட்டம், வடிவு

B. வாட்டம், வட்டம், வடக்கு, வடிவு

C. வடக்கு, வடிவு, வட்டம், வாட்டம்

D. வட்டம், வடக்கு, வடிவு, வாட்டம்

85. சரியாக அமைந்த சொற்றொடரைக் காண்க.

A. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்

B. கலங்காது காலம் கருதி இருப்பர் ஞாலம் கருதுபவர்

C. ஞாலம் கருதுபவர் கலங்காது காலம் கருதி இருப்பர்

D. கலங்காது ஞாலம் கருதுபவர் கருதி இருப்பர் காலம்

86. ஒழுங்கான சொற்றொடரைக் காண்க.

A. துன்பத்திற்கும் பிறப்பிடம் தீமைக்கும் சோம்பலே

B. துன்பத்திற்கும் தீமைக்கும் பிறப்பிடம் சோம்பலே

C. சோம்பலே துன்பத்திற்கும் பிறப்பிடம் தீமைக்கும் பிறப்பிடம்

D. துன்பத்திற்கும் தீமைக்கும் சோம்பலே பிறப்பிடம்

87. பெயர்ச்சொல்லின் வகை அறிக. தீயன்

A. பண்புப் பெயர்

B. பொருட்பெயர்

C. சிறப்புப்பெயர்

D. காலப்பெயர்

88. பெயர்ச்சொல்லின் வகை அறிக. வெற்பு

A. சினைப் பெயர்

B. பொருட்பெயர்

C. இடப்பெயர்

D. தொழிற்பெயர்

89. இலக்கணக் குறிப்பறிக.

A. வாராய் – ஏவல் வினைமுற்று

B. படித்தாய் – இறந்தகால வினைமுற்று

C. செய்தாள் – முன்னிலை இறந்தகால பெண்பால் வினைமுற்று

D. படித்திலீர் – தன்மைப் பன்மை வினைமுற்று

90. அகனமர்ந்து செய்யுள் உறையும் – இதில் “அகன்” என்பது.

A. போலி

B. ஆகுபெயர்

C. பண்புத்தொகை

D. வினைத்தொகை

91. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

காவலரிடம் திருடன் பிடிபட்டான்?

A. யார் யாரிடம் பிடிபட்டான்?

B. திருடன் பிடிபட்டான் யாரிடம்?

C. யாரிடம் திருடன் பிடிபட்டான்?

D. காவலரிடம் திருடன் பிடிபட்டானா?

92. மூன்று காண்டங்களை உடையது சீறாப்புராணம்.

A. எது மூன்று காண்டங்களை உடையது?

B. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது

C. மூன்று காண்டங்களை உடையதா சீறாப்புராணம்

D. மூன்று காண்டங்களை உடையது எது?

93. ஐயோ அதிக மழையால் வீடு இடிந்ததே!

இதன் செய்தி வாக்கியம்.

A. அதிக மழையால் வீடு இடிந்ததே

B. அதிக மழை வீட்டை இடிக்கும்

C. அதிக மழையால் வீடு இடிந்தது

D. அதிக மழையும் வீட்டை இடிக்கும்

94. கொடிது கொடிது தாலிகட்ட தட்சணை கேட்பது – இது எவ்வகைத் தொடர்.

A. செய்தித்தொடர்

B. கட்டளைத்தொடர்

C. வியங்கோள்வினைத்தொடர்

D. உணர்ச்சித்தொடர்

95. முருகன் ஊருக்குச் சென்றான் – இதன் எதிர்மறைத் தொடர்.

A. முருகன் ஊருக்குச் செல்லவில்லை

B. முருகன் ஊருக்குச் செல்லான்

C. முருகன் ஊருக்குச் சென்றிலன்

D. முருகன் ஊருக்குச் செல்லான் அல்லன்

96. ஆசிரியர் மறுப்புரை எழுதுவார் – இதன் பொருள் மாறா எதிர்மறை.

A. ஆசிரியர் மறுப்புரை எழுதார்

B. ஆசிரியர் மறுப்புரை எழுதமாட்டார்

C. ஆசிரியர் உடன்பாட்டுரை எழுதிலர்

D. ஆசிரியர் மறுப்புரை எழுதாமல் இரார்

97. வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – இவ் உவமையால் விளக்கப்பெரும் பொருள்

A. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது

B. அறிவற்றோர் வாழ்வில் உயரமுடியாது

C. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்காது

D. பண்பில்லான் பெற்ற பெருஞ்செல்வம்

98. நவில்தோறும் நூல்நயம் போலும் – இவ் உவமையால் உணர்த்தப்படும் பொருள்

A. பண்புடையர் பட்டுண்டு உலகு

B. பண்புடையர் தொடர்பு

C. செந்தமிழ் நூல்களைக் கற்றல்

D. ஒழுக்கமில்லாரை விட்டு விலகல்

99. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் – இதில் அமைந்துள்ள தொடை.

A. ஒரூஉத் தொடையும் கீழ்க்கதுவாய்த் தொடையும்

B. மேற்கதுவாய் இயைபுத்தொடையும் அடிமோனையும்

C. வருக்க எதுகையும் வருக்க மோனையும்

D. அடிஇயைபும் அடி எதுகையும்

100. முதல் மூன்று சீர்களில் எழுத்து ஒன்றி வருவது.

A. இணை

B. பொழிப்பு

C. ஒரூஉ

D. கூழை





விடைகள்

1.C 2.A 3.D 4.A 5.B 6.B 7.C 8.D 9.A 10.B 11.C 12.D13.D

14.C 15.B 16.A 17.D 18.A 19.A 20.D 21.C 22.B 23.D24.C 25.A 26.C

27.D 28.A 29.D 30.B 31.B 32.A 33.B 34.C 35.D 36.B37.A 38.A 39.B

40.A 41.D 42.C 43.A 44.B 45.C 46.A 47.B 48.A 49.B50.C 51.A 52.D

53.C 54.A 55.B 56.B 57.A 58.C 59.D 60.D 61.C 62.D63.B 64.D 65.B

66.D 67.C 68.C 69.A 70.B 71.A 72.A 73.D 74.C 75.C76.B 77.D 78.A

79.D 80.B 81.D 82.C 83.A 84.D 85.A 86.D 87.B 88.B89.A 90.A 91.C

92.D 93.C 94.D 95.C 96.D 97.A 98.B 99.A 100.D