20 Sept 2017

ELECTRIC RICKSHAWS "SMART E"

மின்சார கைவண்டிகள் (Electric Rickshaws) “Smart E” என்ற பெயரில் ஹரியானாவின் குருகிராமில் தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிக்ஷாக்கள் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவை. மேலும் இவை GPS வசதியோடு கண்காணிப்பு முறையும் பொருத்தப்பட்டிருக்கும்.
இத்திட்டம் ஹரியானா மாநில அரசோடும் டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தோடும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டதின் முக்கிய நோக்கம் கடைநிலைப் பகுதி போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகும். அத்தோடு கார்பன் வெளியீட்டைக் குறைப்பதும் அடுத்த 4-5 வருடங்களில் ஒதுக்கப்பட்ட இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதும் இதன் மற்ற முக்கிய நோக்கங்களாகும்.

MOUSE DEER

நாட்டிலே முதன் முறையாக, தெலுங்கானா வனத்துறை அம்ராபாத் புலிகள் காப்பகத்தில் உள்ள நல்லமலை வனங்களில் சருகு மான் / சுட்டிமான் / எலிமான்களை (Mouse Deer) மறு-அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட சருகு மான்கள் / சுட்டி மான்கள் / எலிமான்கள் தங்களை வனசூழலுக்கு தகவமைத்து கொண்டன என அறிய வரும் வேளையில் நேரு விலங்கியல் பூங்காவில் பெருக்கப்பட்டு வரும் பிற சுட்டிமான்களும் இதே செயல்முறை பின்பற்றலின் வழி வனங்களில் விடப்பட்டு புலிகள் காப்பகத்தின் (Tiger Reserve) உயிரி பல்வகைத்தன்மை (Bio-diversity) கூட்டப்படும்.
இந்த சுட்டிமான் / எலிமான்கள் புள்ளியுடைய செவ்ரோடைன் (Spotted Chevrotain) எனவும் அழைக்கப் படுகின்றது.
வழக்கமாக நாட்டின் இலையுதிர் மற்றும் பசுமை மாறா காடுகளில் (deciduous & evergreen) காணப்படும் இவை அழியும் தருவாயிலுள்ள (endangered species) உயிரினமாகும்.
மார்ச் 2010-ல் நேரு விலங்கியல் பூங்கா, LACONES மற்றும் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தோடு சுட்டிமான்/எலிமான்களுக்கான பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக 6 வருடங்களில் தற்போது அவற்றின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் -- 16 சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தினம்
கருப்பொருள் ---- Caring for all life under Sun
இந்திய சிறுநீரகவியலின் தந்தை என புகழப்பட்ட டாக்டர். K.S.Chugh வயது முதிர்வால் காலமானார்.
சுதந்திர போராட்ட தியாகிகள் பிறந்த கிராமங்களை மேம்படுத்த Shaheed Gram Vikas Yojana என்னும் திட்டத்தை ஜார்கண்ட் அரசு அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டம் முதலாவதாக பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா ( Birsa Munda ) பிறந்த கிராமமான Ulihatuவில் பிஜேபி அகில இந்திய தலைவர் அமித்ஷா துவக்கி வைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில தூய்மை இந்தியா திட்ட தூதராக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சர்தார் சரோவர் அணை சில தகவல்கள்

01) சர்தார் சரோவர் அணை கட்ட பிரதமர் நேரு ஏப்ரல் 05 / 1961ல் அடிக்கல் நாட்டியுள்ளார்.
02) 1987ல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டன.
03) சர்தார் சரோவர், கிராவிட்டி அணை வகையைச் சேர்ந்தது.
சர்தார் சரோவர் அணை, உலகிலேயே இரண்டாவது பெரிய கிராவிட்டி அணையாகச் சொல்லப்படுகிறது. [ உலகின் முதல் பெரிய கிராவிட்டி கான்க்ரீட் அணை, அமெரிக்காவில் இருக்கும் 'கிராண்ட் கெளலி' ( Grand Coulee Dam) ஆகும்.]
04) குஜராத்தின் கெவாடியா எனும் பகுதியில் இந்த அணை நிறுவப்பட்டுள்ளது.
05) நேரு காலத்தில் இவ்வளவு பெரிய அணைக்கான திட்டம் தீட்டப்படவில்லை. அன்றைய திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆழம், 162 அடிகள் மட்டுமே. ( 49.4 மீட்டர் )
06) 2006-ம் ஆண்டே இந்த அணை பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது இதன் உயரம் 121.92 மீட்டர் ஆகும்.
07) தற்போது இதன் உயரம் 138.68 மீட்டராக ( 455 அடி ) உயர்த்தப்பட்டு பிரதமர் மோடி செப்டம்பர் 17ல் நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.
08) சர்தார் சரோவர் அணையில் 30 மதகுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 450 டன் எடைகொண்டது.
09) அணையின் கொள்ளளவு - 5730 மில்லியன் கன மீட்டர்
10) அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் 1200 மற்றும் 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும். இதில் 57% மகாராஷ்டிராவுக்கும், 27% மத்திய பிரதேசத்திற்கும், 16% குஜராத்திற்கும் வழங்கப்படும்.
11) அணையின் நீளம் 1200 மீட்டர். பாசன பரப்பு அதிகபட்சமாக 19 லட்சம் ஏக்கர் ஆகும். ஆனால் 90 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்க திட்டமிட்டதில் இதுவரை சுமார் 19 ஆயிரம் மீட்டர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அளவில் சுமார் 3 லட்சம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறும் அளவில் உள்ளது.